பஞ்சாப் & சிண்ட் வங்கியில் அதிகாரி பணி: தமிழகத்தில் 65 இடங்கள் – முழு விவரம்!
வங்கியில் பணிபுரிய விரும்புவோருக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்திருக்கிறது. பஞ்சாப் & சிண்ட் வங்கி (Punjab & Sind Bank) தற்போது ‘உள்ளூர் வங்கி அதிகாரி’ (Local Bank Officer) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பது குறிப்பிடத்தக்கது.
காலிப்பணியிடங்கள்: இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 145 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மிக முக்கியமாக, தமிழ்நாட்டிற்கு மட்டும் 65 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி என்ன? ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Any Degree) பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஏதாவது ஒரு வங்கியில் குறைந்தது 18 மாதங்கள் அதிகாரியாகப் பணிபுரிந்த அனுபவம் (Experience) கட்டாயம் இருக்க வேண்டும். 
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பள விவரம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. மாதம் ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.
முக்கிய நிபந்தனை: உள்ளூர் வங்கி அதிகாரி பணி என்பதால், அந்தந்த மாநில மொழியை (தமிழ்நாட்டிற்கு தமிழ்) சரளமாகப் பேச, படிக்க மற்றும் எழுதத் தெரிந்திருப்பது அவசியம்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
-
எழுத்துத் தேர்வு (Online Exam)
-
ஸ்கிரீனிங் (Screening)
-
நேர்காணல் (Interview)
-
மெரிட் லிஸ்ட்
-
மொழித் திறன் தேர்வு (Language Proficiency Test)
தமிழகத்தில் தேர்வு மையங்கள்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் ibpsreg.ibps.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: ஏப்ரல் 20, 2026.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பியுங்கள்!


