கமல் நற்பணி இயக்கத்தில் பப்ளிக் ஸ்டார்!

கமல் நற்பணி இயக்கத்தில் பப்ளிக் ஸ்டார்!

நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டது. தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் இப்போது நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து டுவிட்டரில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என்றும் பகிரங்கமாக அறிவித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

புதிய கட்சிக்கு பெயர் தேர்வு செய்வது, கொடியை உருவாக்குவது போன்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் கட்சி பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.அப்போது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அரசியல் பிரவேசத்தையும் கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதை மருத்து விட்ட கமல் வட்டாரம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் ஒரு புதிய ஆப்பை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த ஆப் நடிகர் கமல், அவரது நற்பணி இயக்கம் மற்றும் பொதுமக்களை இணைக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான அறிமுக விழா சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நற்பணி இயக்க நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர். மேலும் ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இயக்கத்தின் சார்பில் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்ற விவரங்களையும் எடுத்துவரச் சொல்லி நிர்வாகிகளுக்கு உத்தரவு போயிருக்கிறது. அத்துடன் தனது இயக்க நிர்வாகிகளைத் தவிர வேறு சில அமைப்பு களுக்கும் கமலிடமிருந்து அழைப்பு போயிருக்கிறது. அரசியல் சார்பற்ற அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளையும் பேசுவதற்காக அழைத்திருக்கிறார். அவர்கள் எல்லோரிடமும் கலந்து பேசிய பிறகு மிகப் பெரிய அளவில் கூட்டம் ஒன்றைப் பொது வெளியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் கமல். அதற்கான தேதி அன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

அதிலும்  அந்தக் கூட்டம் தஞ்சையில் நடக்க வேண்டும் என்பது கமலின் முடிவாம். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வளம் பொருந்திய தஞ்சையை தன் மன்ற நிர்வாகிகள் தற்போது நேரில் பார்த்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் முதல் மாபெரும் கூட்டத்தை தஞ்சையில் நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் கமல். அப்படி முடிவெடுத்தால் தங்களுக்கு பலமான சப்போர்ட்டாக ஒரு லோக்கல் வி.ஐ.பி.யை தேடிய கமல் தஞ்சை நிர்வாகிகளின் கண்ணில் பட்டு இப்போது கமல் நற்பணி மன்றத்தின் ஒரு தூணாக மாறி விட்டார்’ பப்ளிக் ஸ்டார் ‘ என்ற அடைமொழிக்காரரான துரை. சுதாகர்.

ஆம். கமல் பிறந்த நாள் தஞ்சை, ‘உலக நாயகன் விழாவில் கலந்துகொள்வதும் அவரை பற்றி பேசவும் நான் கொடுத்துவைத்து இருக்கவேண்டும் . அதிலும் கமல் சார் செய்யும் எல்லாவித நன்மைகளோடு நானும் தோளோடு தோளாக இருப்பேன். குறிப்பா நம்ம உலக நாயகன் பிறந்த நாளில் வருடம் வருடம் ரத்ததான முகாம் நடத்துவது எனபது சிறந்த விஷயம் காரணம் இந்த ரத்த தான முகாமால் பல உயிர்கள் காபத்தபடுகிறது பெருமையான விஷயம் என்றெல்லாம் பெருமைப்பட்டு பேசினார். பின்னர் அங்கிருந்த கமல் ரசிகர்களிடன் கமல் சார் தஞ்சையில் கூட்டம் போட முடிவெடுத்தால் கூட்டம் நடத்துவதற்க்கான முழுச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அறிவித்து அப்ளாஸ் வாங்கினாராம்.

இது குறித்து பப்ளிக் ஸ்டாரிடம் கேட்ட போது, “நான் கமல் சாரோட ரசிகன்னு சொல்றதை விட பிரியன் என்று சொல்லலாம். அவர் நடிகராக இருந்தாலும் தன்னோட பிறந்த தினத்தையொட்டி நவம்பர் மாதத்தையே உயிர் காக்கும் மாதம் என அவர் ரசிகர் நற்பணி மன்றம் மூலம் அறிவிச்சு ரத்த தானம், கண் தானம் தொடங்கி உடல் தானம் வரை செய்யும் ஒரு மாபெரும் பட்டாளத்தை பல ஆண்டுகளாக கட்டமைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறாரே.. அந்த நல்ல மனசுக் காரருக்காக எதையும் செய்ய நான் தயாரா இருக்கேன். மத்தபடி கமல் சார் தஞ்சையில் முதல் கூட்டம் போட முடிவெடுத்தால் இங்குள்ள கமல் சார் ரசிகர்களுக்கு நான் பக்க பலமாக இருப்பேன் என்றும் சொன்னேன். மிக சிறந்த மனிதாபியான அவர் ஒரு தலைவராக உருவாக என பங்களிப்பை செய்ய ஆயத்தமாகா விட்டால் எப்படி சார்?” என்றார்

error: Content is protected !!