உதயநிதி ஸ்டாலின் & மிஷ்கின் கூட்டணியில் உருவான சைக்கோ டிரைலர்!

உதயநிதி ஸ்டாலின் & மிஷ்கின் கூட்டணியில் உருவான சைக்கோ டிரைலர்!

திமுக இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சைக்கோ’. அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மூத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாக இருந்த இப்படம், பின்னர் சில காரணங்களால் விலக, பிசியின் உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல இந்த படத்திலிருந்து உன்ன நெனச்சு என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்திருந்தது.

இதைதொடர்ந்து அண்மையில் இப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான ‘நீங்க முடியுமா’ வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் சித் ஸ்ரீராம் பாட, கபிலன் எழுதியுள்ளார். இளையராஜா முதன் முறையாக ஒரு திரைப்படத்திற்காக தனது வீட்டிலேயே ஸ்டூடியோ அமைத்து இசயமைத்து இந்த பாடலுக்குதான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படக் குழு அனுப்பிய செய்தி மடலில், ‘ உணர்வை நம்முள் கடத்தும், ஆத்மாவை உள்ளிழுத்து கொள்ளும் பாடல்களில் மெலடிக்கு எப்போதும் முதல் இடம் இருக்கும். இப்போது இணையம் முழுதும், யூடுயூப் முதற்கொண்டு சைக்கோ படத்தின் “நீங்க முடியுமா” பாடல் தான் எங்கும் ஒலித்து கொண்டிருக்கிறது. இசைஞானி இளையராஜா இசையில் ஏற்கனவே வெளியான “உன்ன நினைச்சு” பாடல் ரசிகர்களின் விருப்பங்களை அள்ளிய நிலையில், இப்போது சித் ஶ்ரீராம் குரலில் வெளியாகியிருக்கும் உயிரை உருக்கும் இந்த மெலோடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

Double Meaning Productions தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது….

பாடலுக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு, என்னை மெய்மறக்க செய்திருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. அவரது இசைக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் எக்காலாத்திலும் அவரே இசையின் ராஜா. “சைக்கோ” படத்தின் பாடல்கள் என்னை உருக்கி விட்டது. சிம்பொனி இசைத்துணுக்குகள் கேட்டு மயங்கிப் போனேன் அதிலும் அதில் வரும் வயலின் இசை என்னை அடிமையாக்கிவிட்டது. சித் ஶ்ரீராமின் குரல் இப்பாடலுக்கு பெரும்பலம் தந்திருக்கிறது.

மேலும் இப்பாடலுக்கு வரிகள் தந்திருக்கும் கபிலன் வைரமுத்து வெகு திறமையானவர் என்பதை நிரூபித்திருக்கிறார். பாடலில் வரும் “நீ தெய்வம் தேடும் சிலையோ” எனும் ஒரு வரி போதும் அவரது மேதமைக்கு சான்று கூற. இப்பாடல் விஷுவலாக இன்னும் பல படிகள் மேலே இருக்கும். உணர்வின் உன்னத நிலைக்கு ரசிகர்களை கொண்டு செல்லும் என்பது உறுதி என்றார்.

ரசிகர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இன்று 08.01.2020 உதயநிதி ஸ்டாலின் “சைக்கோ” படத்தின் டிரெய்லரை இணையத்தில் வெளியிடுகிறார்.

மேலும் எங்கள் மொத்த படக்குழுவும் உற்சாகம் கொள்ளும் வகையில் “தர்பார்” படத்தின் திரையிட லோடு “சைக்கோ” படத்தின் இதே டிரெய்லரும் இணைந்து வெளியாகிறது. பாடல், டீஸர் என ரசிகர்கள் “சைக்கோ” படத்தின் ஒவ்வொன்றையும் கொண்டாடி வருகிறார்கள். வரும் 2020 ஜனவரி 24 அன்று “சைக்கோ” படத்தை திரைக்கு கொண்டுவருகிறோம் ரசிகர்கள் நிச்சயம் படத்தையும் கொண்டாடுவார்கள் என்றார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படம் வரும் ஜனவரி 24 அன்று படம் வெளியாகிறது.

error: Content is protected !!