பிரியங்கா காந்தி : உ.பி. மாநில (கிழக்கு) பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்!

பிரியங்கா காந்தி : உ.பி. மாநில (கிழக்கு) பொதுச் செயலாளராக  பொறுப்பேற்றுக் கொண்டார்!

உத்தர பிரதேசகழக்கு காங்கிரஸ் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டு உள்ள பிரியங்கா காந்தி, இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டது. உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிட்கப்பட்டார். இதனையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உ.பி. மாநில (கிழக்கு) பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுநாள் வரை தாய் சோனியா மற்றும் சகோதரர் ராகுலுக்காக மட்டுமே பிரியங்கா தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் பிரியங்கா நேரடி அரசியலில் நுழைந்துள்ளார். இந்நிலையில் பதவியேற்க காங்கிரசின் தலைமை அலுவல கத்திற்கு வந்த அவரை ஏராளமான தொண்டர்கள் கூடி வரவேற்றனர். அப்போது பிரியங்கா ஜிந்தாபாத் என தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், பிரியங்காவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் வெளிப்புறத்தில் ‘பிரியங்கா காந்தி வதேரா’ என்ற பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 11-ம் தேதி முதல் உ.பி.,யில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அன்றே, ராகுலுடன் இணைந்து சாலை வழியே பேரணியாக சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!