தமிழ் குரல் / AI Voice
‘திராவிட அரசியலால் தான் தமிழ்நாடே மணக்கிறது’ என்று ஒரு கூட்டம் கும்மியடிக்க, ‘தமிழக அரசியல் மட்டுமல்ல தமிழ்நாடே சாக்கடையானது திராவிடத்தால் தான்’ என்று இன்னொரு கூட்டம் எகிறியடிக்க… ‘அடியோடு மாத்தறோம், அடிப்படையையே புரட்டி போடுறோம்… தேசியமும் திராவிடமும் தான் எங்கள் எதிரி’ன்னு ஒரு புதிய கூட்டம் முளைக்க…’தேசியம், திராவிடம், தமிழ் தேசியம், கம்யூனிசம், பெரியாரிசம், பேர் இல்லாத பல இசத்தை ஒண்ணா சேர்த்து பிசைஞ்ச பஞ்சாமிர்தம் மாதிரி எங்கிட்ட ஒரு இசம், ரசம் மாதிரி இருக்கு ப்ரோன்னு ஒரு தலைவன் கோடம்பாக்கத்திலிருந்து கோட்டையை பிடிக்க பீகாரிலிருந்து ஒரு கொத்தனாரோடு வர… தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் என்பது ஒரு அயிட்டம் டான்ஸ் மாதிரி ஆகிவிட்டது.
‘தத்துவமாவது தக்காளியாவது… அயிட்டம் சுமாரா இருந்தாலும் ஆட்டம் பக்காவா இருக்கனும்… குடுக்குறத குடுத்தா, காட்ற இடத்துல குத்திட்டு போய்ட்டே இருப்போம்’னு மக்களும் இலவசமா ஒரு நைட் ஷோ பாக்குற மூடுக்கு தங்களோட பிரைன் மோடை ஃபிக்ஸ் பண்ணிகிட்டாங்க.‘சரக்குக்கு நாங்க குடுக்குற காசுல கொஞ்சத்த எங்க பொண்டாட்டிங்க கிட்ட புள்ளைங்க கிட்ட பிச்சையா போட்டுட்டு, கஜானாவுல ஒட்டய போடுவீங்களோ, தமிழ்நாட்டையே ஆட்டய போடுவீங்களோ, அடுத்த தபா ஓட்டு கேட்க வர்றப்போ எலக்ஷன் சீர்வரிசையை முறையை ஒழுங்கா செஞ்சுடுங்க…’ – கையில மை வைக்க நம்ம மக்களோட கண்டீஷன் இவ்வளவுதான்.தமிழ்நாட்டை பொறுத்தவரை அப்பாவி பாமர மக்களின் ஜனநாயக கடமை, சேட்டு கடையில் திருப்பாமலேயே திரும்ப திரும்ப அடகு வைக்கிற ஒரே பொருள் ஓட்டுங்கிற நிலமையில தான் ஓடிகிட்டிருக்கு.

ஆனால், இப்படி ஜனநாயகத்தையே கொன்றுவிட்டு இந்த மண்ணில் சமத்துவம் இருக்கிறது, சமூக நீதி இருக்கிறது என அப்பாவி மக்களை நம்பவைப்பதில் தான் திராவிட அரசியலின் மகத்துவமே அடங்கியிருக்கிறது.பாமர மக்களை கடந்து படிச்சவன் எவனாவது பகுத்தறிவுடன் கேள்வி கேட்டால், ‘ உன்னை படிக்க வச்சதே நான் தான்’னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கும் திராவிடம். இன்னும் சில வில்லங்கம் புடிச்ச விமர்சகன் எவனாவது விளக்கமா கேட்டா, அவனை நீல சங்கின்னு கூலா சொல்லிவிட்டு, அவன்கூட மல்லுகட்ட ஒரு பொண்ணை அனுப்பிவிட்டு தன் கையிலிருக்கும் ஒட்டுமொத்த சொம்பு ஊடகத்த்தையும் வைத்து அதையும் ஒரு ஆபாசக் கூத்தாக்கி சமூக ஊடகங்களில் வைரலாக்கும் திராவிடம். பெய்டு சேனல்ல அதபத்தி விவாதங்களும் நடக்கும். அந்த கேப்ல, ‘எங்க ஊர் கடல்ல எண்ணெய் எடுக்க, கேஸ் எடுக்க வேதாந்தாவுக்கு மட்டும் ஆயிரம் சதுர கீலோ மீட்டரை நீங்க எழுதிவச்சா, எங்க வீட்டு பொண்டாட்டி புள்ளைங்க, பேர பசங்களுக்கு யார் பதில் சொல்றது?’ன்னு கறுப்பு துண்டை இடுப்புல கட்டிகிட்டு காவி வேட்டிகிட்ட பிட்ட போட டெல்லி கிளம்பிடும் திராவிடம்… பாசுரம் பாடிய நம்மாழ்வார் காலத்து நட்பு… டெல்லி தமிழ் பிரச்சார சபான்னு ஒன்னு இருப்பதே இவர்கள் குலம் காக்க நலம் காக்கத் தானே…!இப்படி தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் கடந்த ஐம்பது வருஷங்களுக்கும் மேலாக நடக்கும் திராவிட நாடக அரசியலுக்கு அம்பாசிடர் களாக சர்வதேச தலைவர்களை கம்யூனிஸ்டுகள் நியமிக்க, சாதித் தலைவர்களை கூட்டணி கட்சிகளும், கொள்கை பிடிப்புள்ள தலைவர்களை சமூக நீதி போராளிகளும் கொண்டுவர, பிராண்ட் வேல்யூ குறையாமல் பார்த்துக்கொள்ளும் திராவிடம். ஆக, கோட்டையில் எதோ ஒரு கறுப்பு சிவப்பு கொடி பறந்து கொண்டே இருக்கும்.
தில்லுக்கு துட்டுன்னு திராவிடத்துக்கு எல்லாமே நல்லவிதமா போய்க் கொண்டிருக்க, நா.த.க.ன்னு ஒரு கட்சியை ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழியிலிருந்து – ஆதித்தனார் போட்டியிட்ட ஸ்ரீவைகுண்டம் பக்கத்துல இருக்கிறது – சீமான்னு ஒரு சினிமக்காரன் தோண்டி எடுக்க, தமிழ்நாட்டு மக்களின் ஓட்டுக்கான மதிப்பு இடைத் தேர்தல்களில் தங்கம் விலையைவிட எக்குத்தப்பா எகிறியது.சரி, கையில இருந்தா குடுக்கறோம், ஆறு, குளம், மலை, இப்ப கடல்னு எதுலயாவது கையை வச்சா பிரச்னை தீர்த்துடப் போகுதுன்னு திராவிடமும் தெம்பாதான் இருந்தது? ஆனால் இந்த சீமானுக்கு என்ன சீக்கோ தெரியல, ‘எங்க உங்க திராவிட நாட்டை காட்டு, இனத்த காட்டு, மொழியை காட்டு, எழுத்தைக் காட்டு’ன்னு மக்களை பிசிறு மாதிரி உசுப்பி விட, அவங்களும் செல்போன் டவரை வைத்து கண்டுபிடிச்சிரலாம்னு சைபர் கிரைம் லெவலுக்கு களத்துல் குதித்து தேடோ தேடுன்னு தேட, எங்கப்போனாலும் நோ சிக்னல்…!‘அதெல்லாம் வெளியில தெரியாது… எங்கயாவது பதுங்கு குழிக்குள்ள பக்காவா ஒளிஞ்சிருக்கும்’னு திராவிடம் கீழடியில் குழி தோண்ட, கிடைத்த சட்டி, பானை, இரும்பு, துரும்பு எல்லாமே திராவிட நாகரிகத்தின் தோற்றம் வளர்ச்சி எல்லாத்தையும் தெள்ளத் தெளிவாகியது, அப்படி எதுவும் இல்லையென்று…!
அதோடு விட்றுவாங்களா, ‘ஆதி சங்கரே சொல்லியிருக்கார்’னு அடுத்த பிட்ட போட்டா, ‘அப்ப ஆரியமும் திராவிடமும் கோ பிரதர்ஸா’ என்று குசும்பர்கள் கிசுகிசுவை கிளப்ப, ‘இது என்னடா வம்பா போச்சே’ன்னு அவிங்க, இலக்கியத்தில் மேய, அது நம்மாழ்வார் வைஷ்ணவம்னு திராவிட கனைக்சனை வேற லெவலுக்கு டெப்தா கொண்டு போகுது…திராவிடத்தை பற்றிய இந்த வரலாறு, இலக்கியத்தை எல்லாம் மக்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க முடியாது, அப்படியே செய்தாலும் அவங்களுக்கு அது புரியாது… புரியிற மாதிரி சொல்றதுக்கு ஒரே வழி, ‘தூக்குடா அந்த செல்லத்த கர்நாடகாவுல இருந்து’ன்னு திராவிடத்தைக் காப்பாத கடைசியா கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதம் தான் விஜயலட்சுமி…!அதைப் பார்த்து சீமானே ஆடிப் போனாலும், ‘வாடீ என் சக்களத்தி’ன்னு திராவிடத்தை பிரித்து மேய, அவரது துணைவி முந்தானையை இழுத்துச் சொருக, திராவிடம் வெர்ஸஸ் தமிழ்தேசிய அரசியல் கண்ணகி வெர்ஸஸ் மாதவியாக மாறி விட்டது.
இதுக்கப்புறமும் திராவிட அரசியலும் வரலாறும் மக்களுக்கு புரியாமலா போகும்… புரிந்தது மட்டுமல்ல, அரசியல் விழிப்புணர்ச்சியும் அவர்களுக்கு ஓஹோன்னு வந்ததோடு, உலகத் தமிழர்களையே ஒன்றினைத்து விட்டது இந்த சித்தாந்த யுத்தம். ஆனால்,திராவிட தமிழர்கள் மட்டும் பங்கெடுக்காத பார்வையாளர்களாக பதுங்கிக் கொண்டனர்.தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசியல் என்பது அறிவோ, உரிமையோ அல்ல, அது இலவசமாக கிடைக்கும் போதை, பார்ப்பதற்கு காசு குடுத்து நிகழ்த்தப்படும் எண்டர்டெய்ன்மெண்ட், மீடியாக்களுக்கான இலவச கன்டென்ட்.
ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா என்றால் நிச்சயமாக இல்லை. நனைந்த பனை மரம் என்றும் அதவிட கேவலாகமாகவும் இன்றைய சமூக நீதி காவலர்கலால் அன்று விமர்சிக்கப்பட்ட, இரண்டே வேஷ்டி சட்டையுடன் இந்திய அரசியலையே ஆட்டிப்படைத்த, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, பச்சைத் தமிழன் காமராஜர் தமிழகத்தை ஆண்ட காலத்தில் அறநிலையத்துறை ஆதி தமிழனிடம் இருந்து, காவல்துறை கக்கனிடம் இருந்தது.முதலில் விவசாயம், அப்புறம் ஆரம்பக் கல்வி, அடுத்தது மருத்துவம், பின்னர் தொழில்துறை, உயர் கல்வி என்று தமிழ்நாட்டின் மண், மக்கள் சார்ந்த வளர்ச்சித் திட்டம் அந்தத் தமிழனிடம் மிகத் தெளிவாக இருந்தது. அணைகள் கட்டப்பட்டன, ஆரம்பக் கல்வி அனைவருக்கும் கிடைத்தது, மதிய உணவு மாணவர்களை ஆரோக்கியமாக்கியது, பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் பல தமிழ் நாட்டில் மலர்ந்தன, இன்றும் இந்திய அளவில் முதல் தர கல்வி நிறுவனக்களாக கருதப்படும் மருத்துவக் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிலையங்கள் அப்போதுதான் உருவாக்கப்பட்டன.சிறு குறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. சரியான திசையில் தமிழகத்தின் வளர்ச்சி அரசால் திட்டமிடப்பட்டு விரைவாக சென்று கொண்டிருந்தது. மக்களும் உண்மை, நேர்மை, தர்மம் என ஒரளவுக்கு ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களாக இருந்தனர்.
சமூகம் இப்படி இருந்தால் நாம் ஆட்சிக்கு வருவது எப்படி என்று நினைத்த திராவிடம் சினிமா கவர்ச்சி, ஆபாச பிரச்சாரம், திரிபுவாதம், போதை கலாச்சாரம் என புதியவகை அரசியலை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தது. அதுவே இன்று வரை தொடர்கிறது.இன்று கார்பரேட்டுகளை தெய்வமாக வழிபடும் திராவிட கர்த்தாக்கள் அன்று தங்களின் பிராந்தியங்களில் பொருளாதார வளர்சிக்கு முக்கிய காரணமாக இருந்த சிறு குறு தொழில் முனைவோர்களை ஏகாத்திபத்திய பேய்களாக சித்தரித்து எளிய மக்களின் மனதில் விஷத்தை விதைத்தனர். தமிழக காங்கிரஸ் முதலாளிகளின் சேவகர்கள் என்று பொய்யான கோஷத்தை முன் வைத்தனர். அதற்கு இன்றைய தமிழகமே சாட்சி.தொழில் துறையில் தமிழகத்தின் இன்றைய வளர்ச்சி என்பது வங்கி முதலீடோ, பங்கு முதலீடோ இல்லாமல் தனி நபர்களின் சொந்த நிதி முதலீட்டால், பிராந்திய தொழில் முனைவோரால் உருவாக்கப்பட்டதே தவிர, திராவிட மாடல் விளம்பர அரசுகளால் அல்ல. அவர்களை தொழில் செய்ய விடாமல் ஊழல் லஞ்சத்தை வளர்த்து பஞ்சம் பிழைத்ததை தவிர இவர்களின் பங்கு எதும் இல்லை என்பது இன்றும் நிலைத்திருக்கும் குடும்பத் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அனைவருக்கும் தெரியும்.
சோத்தைவிட கல்வியும், பொருளாதாரத்தில் சுயசார்பும் முக்கியம் என்று செயல்வீரராக காமராஜர் தமிழ் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில், சொந்த மொழியிலேயே எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களிடம், ‘வேற்று மொழிக்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள்’ என்று வெற்று பூச்சண்டி காட்டி, அவர்களை உசுப்பேத்தி, அதில் பலரின் உயிர்களை பலி வாங்கி தங்கள் பதவி ஆசையை தீர்த்துக் கொண்டது தான் திராவிட அரசியல்.தமிழகத்தை அறிவுக் களஞ்சியமாக்கும் பெருங்கனவோடும், பிரம்மாண்ட திட்டங்களோடும் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு தமிழனை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, ’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு படி அரிசி’ என்ற கோஷத்தை முன் வைத்து, தமிழர்கள் மனதில் தாங்கள் பிச்சைக்காரர்கள் என்கிற கீழ்த்தரமான உணர்வை விதைத்து அதிகாரத்தை பிடித்தது தான் திராவிட அரசியல் யுக்தி.
அது மட்டுமா, இன்றுவரை தலித்துகளை தன்னம்பிக்கை இல்லாதவர்களாவும், முஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் பாதுகாப்பற்ரவர்களாக உணரவைத்து, ஓட்டரசியல் நடத்திக் கொண்டிருக்கும் திராவிட மாடலின் நகல்தான் ஆரியத்தின் காவி அரசியல். ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரி என்று நடித்துக் கொண்டிருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது தமிழ் தேசிய அரசியல்.அடிப்படை கட்டமைப்பு முதல் அத்தியாவசிய தேவைகள் வரை ஆயிரம் பிரச்சனைகளை காமராஜர் காலத்தில் தமிழகம் எதிர்கொண்டிருந்த நேரத்தில், ‘ஊர் விளங்காமல் போனதற்கு அந்த ஒற்றை பனைமரத்தில் இருக்கும் மொட்டை பேய் தான் காரணம்’ என்பது போல், அதிகாரத்தின் ஜால்ராக்களாக இருந்த ஒன்றரை சதவிகித பிராமணர்களை கொள்ளிவாய் பிசாசாக சித்தரித்தது திராவிடம். கூடவே அதை விரட்ட கர்நாடகத்து ஈ.வே.ராமசாமியை பெரியாராக கட்டமைத்தது. அதேசமயம் மானுட சமுதாயத்திற்கு அனைத்துவிதமான அறத்தையும் போதித்த ஆதி தமிழன் திருவள்ளுவரை சாதிக்குள் திணித்து, கடலுக்குள் நிறுத்தியதுதான் திராவிடத்தின் வெறுப்பு அரசியல்.
திராவிடத்தின் பாசாங்கான இந்த பார்ப்பனீய எதிர்ப்பே அவர்களை தொடர்ந்து வலிமையானவர்களாக மாற்றிக் கொண்டிருக்கும் யுக்தி. ஆர்யம் வேரூன்றி இருக்கும் வரை அதன் போலி எதிர்ப்பளர்களான திராவிடத்திற்கு இங்கே எந்த சேதாரமும் நிகழாது என்பதே அதன் பின்னால் இருக்கும் சிம்பிள் லாஜிக்.சாதி ஒழிந்துவிட்டால் திராவிட அரசியலும் ஒழிந்துவிடும்கிற பயத்துல சாதிக்கொரு கட்சிக்கு அங்கீகாரம் குடுத்து, கூட்டனியில சீட்டும் குடுத்து, ஆட்சியில் இருப்பவர்கள் சாதிய ஒழிச்சுடுவாங்களா? தமிழர்களை சாதிக்குள்ளும், தெலுங்கர்களையும் கன்னடர்களையும் திராவிடத்திற்குள்ளும் பத்திரமாக பதுக்கி வைத்துக் கொண்டு, சமூக நீதி பேசிக் கொண்டிருக்கும் திராவிட உருட்டை புரட்டி போட்டு விட்டது தமிழ் தேசியம். வேற வழியே இல்லாமல் விஜயலட்சுமிக்கு பட்டுக் கம்பளம் விரித்து தமிழ்நாட்டுக்கு வரவழைத்து, சீதைக்கு பதிலாக சீமான் தான் தீக்குளிக்க வேண்டும் என்று புரட்சி பண்ணிக் கொண்டிருக்கிறது திராவிடம்.
பெரியாரிஸ்டாக, திராவிட போர்வாளாக சீமான் இருந்த பொழுது அவரது காதலியாக வந்தவர்தான் விஜயலட்சுமி. அதாவது விஜயலட்சுமி மீது சீமான் நிகழ்த்தியதாக சொல்லப்படும் வன்கொடுமையானது, ஒரு பெரியாரிஸ்ட் செய்த சில்மிஷமே… அந்த திராவிட இழிவு கலாச்சாரத்தின் பழைய கழிவை இப்போது கையில் அள்ளிக் கொண்டு வந்து தமிழ் தேசியத்தின் மீது சாதிய வன்மத்துடன் பூசிக் கொண்டிருக்கிறது திராவிடம். ‘.தமிழகத்தை சுரண்ட பிறமொழியாளர்களால் கட்டமைக்கப்பட்ட திராவிடத்தை எதிர்க்கும் எதையும் எப்படியாவது சிதைக்கும் சில்லூண்டி வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருப்பது திராவிடம். திராவிடத்தை பொறுத்தவரை நேர்மையான ஜனநாயகம் தமிழகத்தில் வேரூன்றி விடக்கூடாது.
எனென்றால் காமராஜர் காலத்தில் மக்களிடம் இருந்த உண்மையையும் நேர்மையையும் சிதைத்து தான் ஆட்சிக்கு வந்தது திராவிடம். மீண்டும் மக்கள் அப்படி மாறினால், அவர்கள் தமிழ் கலாச்சாரத்தின் ஒழுக்கம் நேர்மையை பின்பற்றினால், திராவிட மாயை கலைந்துவிடும், ஒழுக்கமான நேர்மையான எந்த சமூகத்திலும் திராவிடம் உயிர்வாழ முடியாது என்பது திராவிட போராளிகளுக்கு தெளிவாகவே தெரியும்.அதனால் தான் சீமான் பேசும் தமிழ் மண், மொழி, மக்கள், கலாச்சாரம், பண்பாடு, உயிர்ம நேயம் உள்ளிட்ட எதன் பக்கமும் மக்களின் கவனம் திரும்பிவிடக் கூடாது என்று, சீமானின் தமிழ் நெறி சார்ந்த அரசியலை ஒழிக்க, திராவிடத்தை பாதுகாக்க, பெரியாரின் பேத்தி விஜயலட்சுமியை கர்நாடகத்தில் இருந்து தினம் ஒரு வீடியோ போட்டு கழுவி ஊற்ற மன்றாடிக் கொண்டிருக்கிறது.
கோடம்பாக்கத்திலிருந்து கூவத்தூர் வரை திராவிட அரசியலின் ஒழுக்க நெறி ஊர் அறிந்தது. சட்ட மன்றத்திலேயே பெண் உறுப்பினர் கேள்வி எழுப்பிய போது, ‘பாவாடை நாடா அவிழ்த்து பாருங்கள்’ என்று சொல்லி ஆரம்பமானது தான் திராவிடத்தின் ஆபாச அரசியல். அதற்குப் பின் ஆரிய தலைவியின் சேலையைக் கிழித்தது திராவிட சித்தாந்தம்.இது புரியாமல் அப்பாவி மக்களும் திராவிட போதையில் மயங்கி அரசியலை அயிட்டம் டான்ஸ் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்றால் ஸ்ரீ லீலா கூட இங்கே சி.எம். ஆக முடியும். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதும் திராவிடத்திற்கு நன்றாகவே தெரியும்.
