‘பிட் இந்திய மூமெண்ட்’ என்ற ஒன்றை அறிமுகம் செய்யப் போகிறேன் – ரேடியோவில் மோடி தகவல்!

‘பிட் இந்திய மூமெண்ட்’ என்ற ஒன்றை அறிமுகம் செய்யப் போகிறேன் – ரேடியோவில் மோடி தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலி வழியே மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார். இந் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இம்மாத மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது.

அதில் பேசிய பிரதமர் மோடி,”நம்மது இந்தியா ஒரு பெரிய திருவிழாவிற்காக தயாராகிக் கொண்டு இருக்கிறது. அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைப் பற்றி உலகம் முழுவதும் பரவலாக மக்கள் பேசி வருகின்றனர்.  சேவை செய்யும் உணர்வானது மகாத்மா காந்தி யின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாக இருந்துள்ளது. அவரது 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில், தூய்மையான இந்தியாவை அவருக்கு அர்ப்பணிப்பதுடன், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தினை நாம் தொடங்கவேண்டும். இந்த இயக்கத்தில் இந்திய சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கு கொள்ளும்படி கை கூப்பி வேண்டுகிறேன்.

சுற்றுப்புறத் தூய்மைப் பணி.  சமூகத்துக்கான உடல் உழைப்பு தானம், பிளாஸ்டிக் மறுப்பு ஆகிய மூன்று பணிகளைக கொண்ட்தாக அமைய வேண்டும் இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை கொண்டாடவேண்டும் என அனைவரையும் நான் வேண்டுகிறேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் தவிர்க்கவேண்டும், கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத பைகளை பயன்படுத்தவேண்டும். மேலும் அக்., 27ல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்குள் சேகரிக்கப்பட்ட கழிவுகளை பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டும். இந்த உறுதிமொழியை ஏற்பதுடன், இதை செயல் படுவதற்கு, மஹாத்மா காந்தியைத் தவிர, வேறு ஒரு ஊக்க சக்தி இருக்க முடியுமா.சுதந்திர தின உரையின்போது, பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். நாடு முழுவதும் வியாபாரத்தில் ஈடுபடுவோர், என்னுடைய கோரிக்கையை ஏற்று, பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை விற்பதை குறைத்துள்ளதாக தகவல்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும், ‘துாய்மையே சேவை’ இயக்கம், இந்தாண்டு, செப்., 11ல் துவங் கும். அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்க வேண்டும்

ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த நாள் அன்று ‘பிட் இந்திய மூமெண்ட்’ என்ற ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் உடல் நலம் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும்.

இதனிடையே வனப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், நான் ஹிந்தி பேசியதை, பியர் கிரில்ஸ் எப்படி புரிந்து கொண்டார் என ஏராளமானார் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் இந்த நிகழ்ச்சி எடிட் செய்யப் பட்டதா? அல்லது பல முறை காட்சிப்படுத்தப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர். எனக்கும், அவருக்கும் இடையில், தொழில்நுட்பம் பெரிய பாலமாக செயல்பட்டது. எனது ஹிந்தி மொழியை மொழிபெயர்க்கும் கருவியை அவர் அணிந்து கொண்டார். அதனால் என் பேச்சுக்கு அவர் உடனடியாக பதில் சொன்னார்.. அதே சமயம் அந்த  நிகழ்ச்சிக்குப் பிறகு, வனப் பகுதிகளில் சாகச பயணம் மேற்கொள்ளும் ஆசை, பலருக்கும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.நான் பல முறை கூறியதைப் போல,வட கிழக்கு மாநிலங் களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள்; பல புதிய அனுபவங்களை பெற முடியும்” என்று மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!