பிள்ளைகள் வாழ்வில் தேர்வுதான் முக்கியம் என்று சொல்லாதீர்கள் – மோடி அட்வைஸ்!

பிள்ளைகள் வாழ்வில் தேர்வுதான் முக்கியம் என்று சொல்லாதீர்கள் – மோடி அட்வைஸ்!

நடப்பு ஆண்டில் 10, 11, 12-வது வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வை தேர்வை பயமின்றி, பதட்டமின்றி எழுதுவதற்காக ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். அந்த வகையில் 3-வது முறை யாக இந்த ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லி தல்கோத்ரா விளையாட்டு மைதானத்தில் இன்று ‘பரீக்ஷா பே சர்ச்சா 2020’ என்ற பெயரில் நடந்தது, திங்கட்கிழமை, பகல் 11:00 மணிக்கு பிரதமர் மோடி மாணவர் களுடன் கலந்து உரையாடும் நிகழ்ச்சி நடந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விழாவில் மாநிலங்களில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். அவர்களில் 1,050 பேர் கட்டுரை போட்டி நடத்தி நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உற்சாகம் அளிக்கும் வகையில் பேசினார்.

அவர் பேச்சு விவரம் இதோ

ஒரு பிரதமராக, பல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு புதிய அனுபவத்தினை எனக்கு வழங்கியது. ஆனால், உங்கள் மனதை தொட்ட நிகழ்ச்சி எது என்று யாரேனும் என்னிடம் கேட்டால், இந்த நிகழ்ச்சியே என்று நான் கூறுவேன்.

தேர்வு என்பது எனக்கு நெருக்கமானது. மாணவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை நான் எளிதாக புரிந்துகொள்வேன். நான் உங்களின் குடும்பத்தில் ஒருவர். என்னுடைய வார்த்தைகள் மாணவர் களின் வாழ்வில் ஊக்கமளிக்கும் எண்ணங்களை உருவாக்கும் என நம்புகிறேன்.

இத்தனைக்கும் 2047-ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த 100-ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் முக்கியமானவர்களுடன் நான் இன்று உரையாற்றுகிறேன். நமது நாட்டின் எதிர்காலம் வளம்பெற இந்த தலைமுறை தங்களை சரியாக தயார்படுத்திக்கொண்டு செயலாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகச் சூழல் இன்று மிகவும் மாற்றமடைந்துள்ளது, வாய்ப்புகள் பெருகியுள்ளன. மதிப் பெண்கள் மட்டுமே எதிர்காலம் என்ற நிலை மாறியுள்ளது. இவற்றை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். எனவே வாழ்வில் தேர்வு தான் முக்கியம் என பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களின் எதிர்காலம் பெற்றோர்களுக்கு பெருமைச் சொல்லாகக் கூடாது. கல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் நாம் இயந்திர மாகி விடுவோம். இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள நமது நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டியது முக்கியம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் விருப்பப்படி எதிர் காலத்தை அமைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன, அவற்றை இளைய சமுதாயம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று நம்புகிறேன்.

சந்திரயான்-2க்கு பிறகு, எதுவும் எளிதல்ல என்பதை புரிந்து கொண்டேன். விஞ்ஞானிகளிடம் பேசினேன்; அவர்களை ஊக்கப்படுத்தினேன். வெற்றியின் முதல் படி தோல்வியே. அதிலிருந்து கற்கும் பாடத்தில் தான் வெற்றி இருக்கிறது. ஒவ்வொருவரும் புதிதாய் ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும்.. பாடத்திட்டத்தை போல மற்ற துறைகளுக்குக்கும் மாணவர்கள் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இதன்மூலம் ரோபோட்டிக்ஸ் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடியும். சில பெற்றோர் இதனை டிரண்டாக கருதுகின்றனர். நமது வாழ்க்கை தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. கடின உழைப்பே வெற்றிக்கான வழி. நமது நேரத்தை எவ்வாறு பேலன்ஸ் செய்வது என்பதை நாம் அறிய வேண்டும். இவ்வாறு மோடி உரையாற்றினார்

error: Content is protected !!