அமேசான் பகுதியில் விமான விபத்து: குழந்தை உட்பட 12 பேர் பலி

அமேசான் பகுதியில் விமான விபத்து: குழந்தை உட்பட 12 பேர் பலி

டந்த ஜூன் மாதம், அமேசான் காட்டில் நடந்த விமான விபத்தில் காணாமல் போன நான்கு குழந்தைகள் 40 நாட்கள் கழித்து தீவிர தேடுதலில் உயிருடன் மீட்கப்பட்டது சம்பவமே இன்னும் நினைவில் நிற்கும் சூழலில் அமேசான் பகுதியில் நேற்று காலை சிறிய ரக விமானத்தில் பயணித்த 12 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. பிரேசிலின் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள முக்கிய விமான நிலையம் அருகே விமானம் கீழே விழுந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 12 பேரும் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பலியானார்கள். பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2- வது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!