பதஞ்சலி கண்டுபிடித்த கொரோனா மருந்தின் விளம்பரத்துக்கு மோடி அரசு தடை!

பதஞ்சலி கண்டுபிடித்த கொரோனா மருந்தின் விளம்பரத்துக்கு மோடி அரசு தடை!

கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப் படுத்திய மருந்தை விளம்பரம் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

உலகமே கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. மேலும் இதுவரை கொரோனாவுக்கு எந்த ஒரு தடுப்பு மருந்தும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் பதாஞ்சலி நிறுவனம் , கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறி , கோர்னில் என்ற மாத்திரைகளை அறிமுகம் செய்துள்ளது. இது கொரோனா எதிர்ப்பு மருந்து எனவும், தங்களது சோதனையில் கரோனா நோயாளிகளை இந்த மருந்து குணப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் யோக குரு ராம்தேவ் கூறுகையில் , “உலகமே காத்திருந்த தருணம் வந்துவிட்டது. இன்று கொரோனாவின் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கிறோம். எங்கள் நிறுவனம், பேராசிரியர் பல்பீர் சிங் தோமர் மற்றும் ஆச்சார்யா ஜி ஆகியோரின் கூட்டு முயற்சியால், கரோனாவின் மருந்தை ஆயுர்வேதா முறையில் தயாரித்துள்ளோம். இந்த மருத்துவ ஆய்வின் மூலம் அனைவரும் தற்போது கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மருத்துவ கட்டுப்பாட்டு சோதனையும் செய்யப்பட்டு விட்டது. பதாஞ்சலி ஆராய்ச்சி மையம் பராய் மற்றும் நிம்ஸ் சோதனை செய்தனர்.பதஞ்சலியின் இந்த சோதனையின் போது 95 நோயாளிகள் பங்கேற்றனர் மற்றும் 3 நாட்களுக்குள் 69% நோயாளிகள் மீட்கப்பட்டனர். 7 நாட்களுக்குள் 100% பேரும் நோய்தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர்” என தெரிவித்துள்ளார் .மேலும் அடுத்த ஒரு வாரத்தில் பதஞ்சலி கடைகளில் இந்த மாத்திரைகள் கிடைக்கப் பெறும்” என்று தெரிவித்தார்.

இந்த மாத்திரை மருத்துவ ஆய்வுகளின் விவரங்களை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை, அதே நேரத்தில் இந்த மருந்துக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. பதஞ்சலியின் சிகிச்சை கூற்றுக்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அல்லது சுகாதார அமைச்சகம் அல்லது ஆயுஷ் அமைச்சகம் கூட எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து ஆயுர்வேத அமைச்சகம் இந்த மருந்தை முழுமையாக சோதிக்கும் வரை இந்த விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!