’பாட்னர்’ – விமர்சனம்!

’பாட்னர்’ – விமர்சனம்!

சிஸ்டர் சென்டிமெண்ட், திருட்டு, சயின்டிஸ்ட், ரிசர்ச் என்று தொடங்கும் கதை அட்டகாசம் என்று ஃபீல் பண்ண பண்ணி கொஞ்சம் ரிலாக்ஸாக உட்காரும் ரசிகர்களுக்கு, சற்று நேரத்திலேயே இது காமெடி படமா?… அல்லது பழைய நாடகமா? என்று வாய் விட்டு புலம்பும் அளவுக்கு திரைக்கதை மோசமாக அமைந்துள்ள படமிது..! டைட்டில் கார்ட் முடிந்ததில் இருந்து எண்ட் கார்ட் முடியும் வரை வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். திருடப்போகும்போது கூட ஒரு சீரியஸ் இல்லை. கோலிவுட் சினிமாவில் இது நாள் வரை  பார்த்து பார்த்து ரசித்த காட்சிகளை கோர்த்து போரடிக்க வைத்து அனுப்புகிறார்கள்!.

அதாவது சொந்த தொழில் செய்து கடன் பிரச்சனை ஏற்பட்ட சூழலில் சிங்காரச் சென்னை வந்து தனது சிநேகிதன் யோகி பாபுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார் ஹீரோ ஆதி. அப்போது விஞ்ஞானி பாண்டியராஜனிடம் இருக்கும் சிப்பை கொள்ளையடித்தால் 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால், அவரிடம் இருக்கும் சிப்பை எடுக்க ஆதியும், யோகி பாபுவும் செல்கிறார்கள். அங்கே ,நடந்த களேபரத்தால், யோகி பாபு, ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அவரை மீண்டும் யோகி பாபுவாக மாற்றுவதற்காக பாண்டியராஜனை தேடிப் போக, அவர் அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறார். இதனால், பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இருவரும் அவற்றை எப்படி சமாளித்தார்கள், மீண்டும் ஹன்சிகா யோகி பாபுவாக மாறினாரா, இல்லையா, என்பதை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருப்பதுதான் ‘பார்ட்னர்’ படத்தின் கதை..

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆதி தமிழில் படம் நடித்துள்ளார். ஆனால் இது அவருக்கான கம்பேக் படமாக அமையவில்லை என்பதே உண்மை. நாயகனின் நண்பன் கல்யாணாக வரும் யோகிபாபு. முதல் பாதி முழுக்கவே வந்தாலும் சிரிப்பை கொஞ்சூண்டு மட்டுமே வர வைக்கிறார். மற்றபடி, அதே ஓல்ட் டெம்ப்ளேட் காமெடிகள்தான். இதேபோல் , ஹீரோயினாக வரும் பாலக் லால்வாணி, ரோபோ ஷங்கர், ரவிமரியா, முனீஷ்காந்த், தங்கத்துரை என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் யாருடைய கேரக்டரும் படம் பார்ப்பவர்களை பெரிய அளவில் கவரவில்லை.

அதே சமயம் இண்டர்வெல்லுக்கு பிறகு யோகி பாபுவுக்குப் பதில் வரும் ஹன்சிகா, அவரது வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். உள்ளுக்குள் ஆணாகவும் வெளியில் பெண்ணாகவும் என அவரின் வித்தியாசமான உடல்மொழி அபாரம்.

கேமராமேன் பீர் அஹமத் கதைக்கு ஏற்றபடி கலர்புல்லாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார். சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியும், கொண்டாடும் படியும் இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.

எழுதி இயக்கியிருக்கும் மனோஜ் தாமோதரன், மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்துக்கொண்டு ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்க ஆசைப்பட்டிக்கிறார். ஆனால், காட்சிகள் அனைத்தும் அதர பழசாக இருப்பதால் அது நடக்கவில்லை.

மொத்தத்தில் இந்த பார்ட்னர் – ஏமாற்றம்!

மார்க் 2/5

error: Content is protected !!