பார்ப்பான் என்றால் சாதி அல்ல, -கவனித்துக் கொண்டே இருப்பவன்!

பார்ப்பான் என்றால் சாதி அல்ல, -கவனித்துக் கொண்டே இருப்பவன்!

பிராமணனிடம் இருந்து எதை பிடுங்கலாம் என்றுதான் ஆராய்ச்சி செய்தார்களே தவிர அவனை போல் படிப்பது எப்படி, உழைப்பது எப்படி சிந்திப்பது எப்படி என ஒரு பயலும் ஆராயவே இல்லை. அவன் அவன் போக்கில் இந்தியா புறக்கணித்தாலும் அமெரிக்காவில் பெரும் வேலைகளில் இருக்கின்றான். இவன் அங்கு சென்றும் சமூக நீதி செத்துவிட்டது, சாதி ரீதியாக எனக்கு அநீதி நடக்கின்றது என புலம்பிகொண்டே இருக்கின்றான்.

பார்ப்பான் என்றால் சாதி அல்ல, சூழலையும் உலகையும் கவனித்து கொண்டே இருப்பவன் என பொருள். அதை இவர்களும் செய்து அவர்களை போல் உலகை கவனித்து உழைத்து முன்னேற‌ முயற்சிக்கலாம், இல்லை அவர்களின் நிலையில் ஓரளவேனும் எட்ட முயற்சிக்கலாம்.மாறாக கருப்பு சட்டை போட்டு அழுது கொண்டே இருந்தால் காலமெல்லாம் அழுது கொண்டே இருந்தால் எக்காலமும் அழுகைதான்.

73 வருடமாக இத்தேசம் கருப்புசட்டை கோரிக்கைபடிதான் திறந்துவிடபட்டிருக்கின்றது, என்ன ஆயிற்று?பிராமணன் வகித்த பொழுது எதெல்லாம் அரசு துறையில் சிறந்திருந்ததோ அதெல்லாம் இன்று நாசமாயிற்று, பிராமணன் இருந்த பொழுது இல்லாமல் இவர்கள் இருக்கும் பொழுது வந்த ஒரே மாற்றம் ஊழல்,லஞ்சம், சொத்துகுவிப்பு அதிகார துஷ்பிரயோகம், தனியார் துறைகளிலாவது கடந்த 70 ஆண்டுகளில் முன்னேறிய ஒரு கருப்பு சட்டை கோஷ்டி உண்டேன்றால் வியாபாரியோ, தொழிலதிபரோ, கல்வி தந்தையோ என எவனுமே இல்லை.

என்றைக்கு அடுத்தவனிடம் இருப்பதை பிடுங்க நினைக்காமல் அவனை போல் உருவாக்க வேண்டும் எனும் தகுதி வளர்க்க நினைக்கின்றார்களோ அன்றுதான் மாற்றம் வரும்..ஈரோட்டு ராம்சாமி சொன்னது வெறுப்பு அரசியல், முழு வன்மம், வெறுப்பிலே வரும் சிந்தனை அறிவுடமையாய் இராது, அந்த சிந்தனை அழிவினை கொடுக்குமே அன்றி முன்னேற்றம் கொடுக்காது.

ஹிட்லருக்கும் ராமசாமிக்கும் வித்தியாசம் ஏதுமில்லை, ராம்சாமி கையில் அதிகாரமும் ஆயுதமுமில்லை ஹிட்லருக்கு அது வாய்த்தது. ஆனால் ஹிட்லரின் அழிவுக்கு பின் அவனை தலைமொழுகிய ஜெர்மனி எல்லா இனத்தையும் அணைத்து இன்று வெற்றிகொடி நாட்டிற்று. ஆனால் வெறுப்பு அரசியல் பேசிய ராம்சாமியின் வழிவந்த கோஷ்டி இன்னும் மனம் முழுக்க வெறுப்பும் சகதி நிறைந்த சிந்தனையுமாய் தானும் நாசமாகி சமூகத்தையும் நாசபடுத்துகின்றது

கார்ல் மார்க்ஸும் லெனினும் சொன்னது வெறுப்பு அரசியல் அதை பேசி உருப்பட முடியாது என சிந்தித்த ரஷ்யா அதை உதறியது. மா சே துங் சொல்லிகொடுத்த வெறுப்பு அரசியலின் விளைவினை மெல்ல உணர்கின்றது சீனா, தன் அடிப்படை சித்தாந்தத்தில் எங்கோ தவறு இருப்பது அதற்கு புரிகின்றது.

அப்படி ராம்சாமி போதித்த வெறுப்பு அரசியலை உணர்ந்து அதை தலைமொழுகினால் நல்லது. இல்லையேல் இதே நிலையில் இருந்தால் இன்னும் 700 ஆண்டுகள் இதே நிலையில் இருந்து பைத்தியம் போல் இந்துவேதங்களை சீண்டிகொண்டே இருக்க வேண்டியதானன்றி வேறு ஒரு மண்ணாங்கட்டி மாற்றமும் வரபோவதில்லை.

ஸ்டான்லி ராஜன்

Related Posts

error: Content is protected !!