குளிர்காலக் கூட்டத்தொடர் – டிசம்பர் 4இல் தொடக்கம் -18 முக்கிய மசோதாக்கள் தாக்கல்!

குளிர்காலக் கூட்டத்தொடர் – டிசம்பர் 4இல் தொடக்கம் -18 முக்கிய மசோதாக்கள் தாக்கல்!

டிசம்பர் 3 ஆம் தேதி, ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா) அறிவிக்கப்படும் என்ற சூழலில் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், 2023, டிசம்பர் 4ல் துவங்கி, 22ம் தேதி வரை நடக்கும். டிசம்பர் 2ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 18 மசோதாக்களின் பட்டியலை அரசு பட்டியலிட்டுள்ளது. அதன்படி ஜம்மு- காஷ்மீர், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் மகளிர் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, 3 குற்றவியல் சட்டங்களை மாற்றும் மசோதா ஆகிய முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத் தொடரில் தாக்கலாகின்றன.

இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பிரதிநிதித்துவத்தைக் குறைத்து புலம் பெயர்ந்த காஷ்மீரிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் சட்டப் பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை, தற்போது உள்ள 107 இடங்களிலிருந்து 114 ஆக அதிகரிக்கும் மசோதா, ஜம்மு- காஷ்மீர், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது, 3 குற்றவியல் சட்டங்களை மாற்றும் மசோதாக்கள் தாக்கலாகின்றன.

மேலும், இதுதவிர 2023-24-ம் ஆண்டுக்கான நிர்வாக ரீதியான செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா உள்ளிட்ட 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. குளிர்காலக் கூட்டத்தில் இந்த மசோதாக்களின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடுவதற்கு ஒரு நாள் முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும். ஆனால், டிசம்பர் 3 ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், இம்முறை ஒரு நாள் முன்னதாகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!