பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது…சுற்றிவளைத்த ராணுவம்!- வீடியோ!!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது…சுற்றிவளைத்த ராணுவம்!- வீடியோ!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது ஜாமீனை நீட்டிக்க கோரி இம்ரான் கான் ஆஜரானார். அப்போது அதிரடியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த ராணுவத்தினர், இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்தனர்.

இம்ரான் கானை வலுகட்டாயமாக கைது செய்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கைது நடவடிக்கையின் போது இம்ரான் கானின் வழக்கறிஞரும் கடுமையாக தாக்கப்பட்டார். நீதிமன்றத்திற்கு செல்லும் முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட இம்ரான் கான், தான் கைது செய்யப்பட இருப்பதாக குறிப்பிட்டார்.

இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் 100-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. இதில் ‘காதிர் ட்ரஸ்ட்’ வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் கைது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசார் மாஷ்வானி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இம்ரான் கானின் கைதை எதிர்த்து அவரது கட்சியான தெஹ்ரீக்-இ- இன்சாப் நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!