பாக்.கில் நடக்கவிருந்த சார்க் மாநாடு கேன்சல்!

பாக்.கில் நடக்கவிருந்த சார்க் மாநாடு கேன்சல்!
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘சார்க்’ அமைப்பின் உச்சி மாநாட்டை அடுத்த மாதம் (நவம்பர்) பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
saarc sep 30
ந்த நிலையில், காஷ்மீரில் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது. இந்தியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான் ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. மற்ற நாடுகளையும் தொடர்ந்து  சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக  இலங்கையும் அறிவித்தது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் 19 – ஆவது “சார்க்’ மாநாடு, வரும் நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான் இலங்கை உள்ளிட்ட நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால்  இஸ்லாமபாத்தில் நவம்பர் மாதம் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சார்க் மாநாடு நடைபெறும் தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts