‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேணாமுன்னா வேணாம் – எதிர்கட்சிகள் கோரிக்கை!

‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேணாமுன்னா வேணாம் – எதிர்கட்சிகள் கோரிக்கை!

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதிஷ் சந்திரா மிஷ்ரா, தி.மு.க. சார்பில் கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரெக் ஓ ப்ரியென், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்க ராஜன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஜா, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், ராஷ்ட்ரிய லோக் தள் சார்பில் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலில் பயன்படுத்த கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்த தலைமை தேர்தல் ஆணையரை வரும் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திக்க முடிவு செயதுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் வேலைவாய்ப்பு, விவசாயம் மற்றும் அரசு நிறுவனங்கள் மீதான மத்திய அரசின் ஆதிக்கம் ஆகிய 3 முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.நடக்கபோகும் மக்களவை தேர்தலில் ரபேல் விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வேலைவாய்ப்பின்மை ஆகிய விவகாரங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!