அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அடாவடி போக்குக்கு பேர் போன அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கினால், அமெரிக்காவுக்கு படிக்க மற்றும் வேலை தேடி போகும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்ற செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கும் சூழலில் போலி விசாவில் அமெரிக்கா சென்ற 100க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன் போலி விசா பெற்றுத் தந்து வெளிநாட்டினர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற உதவிய எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவ்ல் வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி, 500க்கும் அதிகமான இந்திய மாணவர்களின் நிலை, கேள்விக்குறியாகி உள்ளது.

அமெரிக்காவில் மாணவர்களுக்கான விசாவில் அங்கு போய் தங்குவதற்கும், தங்கள் கல்வி தொடர் பான தொழில்துறையில் பணியாற்றவும் அனுமதி வழங்கப்படுகிறது. அதே சமயம் மாணவர்கள் போர்வையில் சட்டவிரோத குடியேற்றம் நடப்பதை தடுக்க அதிபர் டிரம்ப், கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சகல தரப்பும் விசா பெறுவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனி டையே அமெரிக்க போலீசாரும் அதிரடி நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர். இதையொட்டி

மாணவர் விசா பெறுவது யார், அவர்களுக்கு விசா பெற்றுத் தருவது யார் என்பதை அறிய மிக்சிகன் மாகாணம், பர்மிங்டன் ஹில்ஸ் பகுதியில் ஒரு போலி பல்கலையை, போலீசார் உருவாக்கி அது பற்றி இணையதளம் வாயிலாக விளம்பரப்படுத்தினர்.

இதை நம்பி வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர், இந்த பல்கலையில் சேர விரும்பினர். அவர்களை தொடர்பு கொண்ட சிலர் அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி, விசா தந்து பல்கலையில் சேர வைத்தனர்.

இதையடுத்து இந்த பல்கலையில் சேர்ந்தவர்கள் யார், அவர்களுக்கு விசா பெற்று தந்து உதவி செய்தவர்கள் யார் என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர்.இதில் டெட்ராய்ட் பகுதியை சேர்ந்த ஆறு பேர், புளோரிடா மற்றும் விர்ஜீனி யாவை சேர்ந்த தலா ஒருவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் அனைவரும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் என்பதும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

அதாவது இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர் களை, போலி விசா மூலம், இவர்கள் இந்த பல்கலையில் சேர்த்து உள்ளனர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 600க்கும் அதிகமான மாணவர்களே இந்த பல்கலையில் சேர்த்துள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ளனர். இதையடுத்து இவர்களைத் தேடி பிடிக்கும் பணியில், அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரி கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இது வரை 100க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இப்படி போலி விசாவில் சென்ற மாணவர்களை தாயகத்துக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை யிலும் அமெரிக்க குடியேற்ற துறை ஈடுபட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் படிக்கும் ஆர்வத்தில் சென்ற, இந்திய மாணவர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

அதே சமயம் பாதிக்கப்பட்ட ஆந்திர மாணவர்கள் அமெரிக்க தெலுங்கு சங்கத்தினரின் உதவியை நாடியுள்ளனர்.இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும்படி இந்திய துாதரகத்திடம், தெலுங்கு சங்கம் முறையிட்டு உள்ளது. இது பற்றி, அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகளிடம், இந்திய துாதரக அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

போலி விசா விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசின் வெளிநாடு வாழ் ஆந்திர மக்கள் நலத் துறைக்கான ஆலோசகர் ரவிகுமார், “அமெரிக்காவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஆந்திர மாணவர்கள் உள்ளனர். தற்போது, 600 மாணவர்கள் மட்டுமே சிக்கலில் உள்ளனர்.

அமெரிக்காவுக்கு படிக்கச் செல்வதற்கு முன் சம்பந்தப்பட்ட பல்கலை பற்றியும், விசா பற்றியும், முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என மாணவர்களிடம் பல முறை, அரசு தெரிவித்து உள்ளது.

சிக்கலில் உள்ள மாணவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் பொய் என தெரிந்தால், அவர்களை காப்பாற்ற தேவை யான நடவடிக்கைகளை, ஆந்திரா நிச்சயம் எடுக்கும். மாணவர்களின் பெற்றோர் பயப்படத் தேவையில்லை”என்று தெரிவித்தார்

Related Posts

error: Content is protected !!