ஓர் இரவு… 50 லட்சம்… கோடீஸ்வரர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்!
உலகமே 2026-ஐ உற்சாகமாக வரவேற்றுக் கொண்டிருக்கும் வேளையில், உலகப் பெரும் கோடீஸ்வரர்கள் (Billionaires) இந்தப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடினார்கள் என்று தெரிந்தால் உங்களுக்குத் தலைசுற்றும். சொகுசு கார்கள், தனிப்பட்ட விமானங்கள், பிரம்மாண்டமான உல்லாசக் கப்பல்கள் என அவர்கள் செலவழித்த தொகை சாமானியர்களின் கற்பனைக்கு எட்டாதது.
எங்கே சென்றார்கள் இந்த கோடீஸ்வரர்கள்?
-
செயின்ட் பார்ட்ஸ் (St. Barts) தீவுகள்: கரீபியன் கடலில் உள்ள இந்தச் சிறிய தீவுதான் கோடீஸ்வரர்களின் ‘பேவரைட்’ ஸ்பாட். ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) போன்ற ஜாம்பவான்கள் தங்களின் பல நூறு கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான உல்லாசக் கப்பல்களை (Superyachts) இங்கேதான் நங்கூரமிட்டு நிறுத்தியிருந்தனர். இங்கே ஒரு இரவு தங்குவதற்கான குறைந்தபட்ச வாடகையே பல ஆயிரம் டாலர்கள்!
-
ஆஸ்பென், கொலராடோ (Aspen, Colorado): குளிரையும் பனியையும் ரசிக்க விரும்பும் பணக்காரர்கள் அமெரிக்காவின் ஆஸ்பென் நகரில் குவிந்தனர். இங்கே உள்ள சொகுசு விடுதிகளில் ஒரு இரவு தங்குவதற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 40 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை (Five figures in dollars) செலவு செய்ய வேண்டியிருக்கும்.
-
பிரான்ஸ் – கோர்ச்செவல் (Courchevel): ஐரோப்பிய கோடீஸ்வரர்களின் தேர்வு இதுதான். இங்கே உள்ள ஸ்கையிங் (Skiing) ரிசார்ட்டுகளில் புத்தாண்டு இரவு என்பது அத்தனை பிரம்மாண்டமாக இருக்கும். உலகின் மிக விலை உயர்ந்த மதுபானங்களும், உயர்தர உணவுகளும் இங்கே பரிமாறப்பட்டன.
பணக்காரர்களுடன் கொண்டாட எவ்வளவு செலவாகும்?
நீங்கள் ஒரு கோடீஸ்வரர் இல்லை, ஆனால் அவர்களுடன் அந்த பார்ட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான ‘என்ட்ரி பீஸ்’ மற்றும் ஒரு இரவு தங்க ஆகும் செலவு மட்டுமே குறைந்தது ரூ. 10 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை இருக்கும். இது தங்குவதற்கு மட்டுமே! உணவு, மதுபானம் மற்றும் இதர கொண்டாட்டங்களுக்குச் செலவு தனிக் கணக்கு.
ஏன் இவ்வளவு செலவு?
-
தனித்தன்மை (Privacy): எந்தவொரு கேமராக்களோ அல்லது பொதுமக்களின் தொந்தரவோ இல்லாமல் கொண்டாடுவதற்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
-
பிரத்யேக வசதிகள்: நமக்காகக் காத்திருக்கும் தனிப்பட்ட உதவியாளர்கள், உலகத் தரம் வாய்ந்த இசைக்கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சி என அனைத்தும் அங்கிருக்கும்.
மொத்தத்தில் சாமானியர்கள் தெருவோரக் கடைகளிலும், வீடுகளிலும் பட்டாசு வெடித்துப் புத்தாண்டை வரவேற்க, கோடீஸ்வரர்களோ ஒரு நாட்டின் பட்ஜெட் அளவிற்கு ஒரு இரவில் செலவு செய்து 2026-ஐ வரவேற்றுள்ளனர். காசு உள்ளவனுக்குத்தான் புத்தாண்டு ‘கலர்ஃபுல்’ போல!
தனுஜா



