பத்திரிக்கையாளர்கள் கொலை குறித்து யுனெஸ்கோ பிரஸ் ரிலீஸ்1
ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று யுனெஸ்கோ (UNESCO). நிறுவனம், உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவது குறித்த கணக்கீட்டை நேற்று புதன்கிழமை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பத்திரிக்கையாளர் கொலை குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 827 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக 2015-16 ஆகிய இரண்டு ஆண்டுகள் பதற்றமான இடங்களில் மட்டும் 59 சதவீதம் கொலைகள் நடைபெற்றுள்ளன. கஅதில், சிரியா, ஈராக், யேமன் மற்றும் லிபியா உள்ளிட்ட அரபு நாடுகளில்தான் பெரும்பாலான கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கு அடுத்தாக லத்தீன் அமெரிக்காவில் அதிக கொலைகள் நடைபெற்றுள்ளது.

கடந்த 2006-2015 காலகட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 59 சதவீதம் கொலைகள் நடைபெற்றுள்ளன. அதுவும், போர் சூழல் உருவான இடங்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது.அந்த காலகட்டங்களில் மட்டும் கொல்லப்பட்ட சுமார் 213 பத்திரிகையாளார்களில் 78 பேர் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள். அதவாது சுமார் 36.5 சதவீதம். அதேசமயம், மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் கடந்த 2014-ஆம் ஆண்டில் பூஜ்ஜியம் என்றிருந்த நிலை மாறி, கடந்த ஆண்டில் மட்டும் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்களை விட, உள்ளூர் பத்திரிகையளர்களுக்கே ஆபத்து அதிகம் நிகழ்ந்துள்ளது. ஆனாலும், கடந்த 2013-ஆம் ஆண்டில் நான்கு பேர் என்றிந்த நிலை மாறி 2014-ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், ஆன்லைன் பத்திரிகையாளர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அந்த நிலைமையும் மாறி, கடந்த ஆண்டில் மட்டும் ஆன்லைன் பத்திரிகையாளர்கள் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெண் செய்தியாளர்களை விட ஆண்கள் 10 மடங்கு அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர்.
2014-15 ஆண்டுகளில் 194 ஆண் பத்திரிகையாளர்களுக்கு 18 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தொலைக் காட்சிகளில் பணிபுரிபவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், பாதி பேர் சிரிய நாட்டை சேர்ந்த பிளாக் எனும் வலைபக்கத்தில் எழுதும் பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


