ஓஹோ எந்தன் பேபி – விமர்சனம்!

ஓஹோ எந்தன் பேபி – விமர்சனம்!

ந்த வெள்ளித்திரை எனப்படும் சினிமாவில் குறிப்பாக கோடம்பாக்கத்தில் டி ஆர் காதல், இதயம் முரளி காதல், மைக் மோகன் காதல், கமல் காதல், அஜித் காதல், சிம்பு காதல் என ஏகப்பட்ட வெரைட்டி உண்டு. இந்த அத்தனை வகை காதல்களையும் கலந்துக் கட்டி இந்த கால 2-கே யூத்களுக்கு ஏற்றவாறு நேர்த்தியாக வழங்கி ரசிக்க வைத்து விடுகிறார்கள் . குறிப்பாக பள்ளிப் பருவ காதல் முதல் அனுபவக் காதல் வரை பல தரப்பட்ட காதல் பருவங்களை நினைவூட்ட செய்ய இந்த கால இளைஞர்களை ஃபோகஸ் அதன் மூலம் புது விதமான சீமான் காதல் கதை ஒன்றை ரெப்ரெஷ்ஷிங்கான காதல் காட்சிகளுடன் கொடுத்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்கள்.

அதாவது கோடம்பாக்கத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வரும் ருத்ரா, நடிகராக நடித்துள்ள விஷ்ணு விஷாலிடம் முதல் படம் பண்ணுவதற்காக கதை சொல்ல செல்கிறார். அவர் சொல்லும் இரண்டு கதைகளில் ஈர்க்கப்படாத விஷ்ணு விஷால், காதல் கதையை எதிர்பார்க்கிறார். இதை அடுத்து தன்னுடைய வாழ்க்கையில் நிகழந்த சில சம்பவங்களை கூறுகிறார். இவர் சிறு வயது முதல் தற்போது இருக்கும் நிலை வரை காதலித்த நபர்கள் மற்றும் நாயகி மிதிலாவுடன் நடந்த பிரேக்கப் வரை சொல்லி கதையை முடிக்கிறார். அடுத்து என்ன ஆனது என நாயகன் விஷ்ணு விஷால் கேட்க, அதற்கு ருத்ரா இவ்வளவு தான் இப்போது வரை வாழ்வில் நடந்துள்ளது என்றும் அடுத்த என்ன ஆகும் என்பது இனிமேதான் தெரியும் என்றும் பதிலளிக்கிறார். இந்த கதையை கேட்ட விஷ்ணு விஷாலுக்கு மிகவும் பிடித்துவிட்டதாக சொல்லி, ருத்ராவை மீண்டும் போய் அவரது காதலியை சந்திக்க சொல்கிறார். மேலும் அந்த சந்திப்பிற்கு பிறகு என்ன நடக்கிறதோ அதையே முழு கதையாக மாற்ற சொல்லி அனுப்பி விடுகிறார். இதைத்தொடர்ந்து பிரிந்து சென்ற மிதிலாவை மீண்டும் சந்திக்க வெளியூர் செல்கிறார் ருத்ரா. போன இடத்தில் மிதாலியை சந்தித்து உடைந்து போன காதலை மீண்டும் ஒட்ட வைத்தாரா? அந்த காதல் பிரிவின் நிஜக் காரணம் என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடையை இளமை துள்ளளோடும், முன்னரே சொன்ன காதல், நட்பு, உறவுகள் பற்றிய அலசலோடும் சொல்லி இருப்பதுதான் ‘ஓஹோ எந்தன் பேபி’ படக்கதை.

நியூ பேஸ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் விஷ்ணுவிஷாலின் பெரியப்பா மகன் ருத்ரா, நியூ ஃபேஸ் போலில்லாமல் அனுபவ நடிகர் போல் நடித்திருக்கிறார். அறிமுக நடிகர்கள் காதல் காட்சிகளில் கூச்சப்படுவார்கள்.இவர் ஸ்கூல், காலேஜ், யங் ஏஜ் என மூன்று காலக்கட்டங்களுக்கும் ஏற்ப தன் உருவத்தை மாற்றிக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு பேரோடு புகுந்து விளையாடுகிறார்.கோபம், மற்றும் சோக உணர்வுகளையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.இவரின் துறுதுறு நடிப்பு யதார்த்த வசன உச்சரிப்பு மற்றும் முகபாவணிகள் ஆகியவை பிரஷ்ஷாக இருப்பது தமிழ் சினிமாவுக்கு நல்வரவுதான்

ஆக்டராகவே நடித்திருக்கும் விஷ்ணு விஷால், அஜித், விஜய் ஸ்டைல் நடித்திருக்கும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அதிலும், மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் காட்சிகளில் அவர் நடிப்பது, ஒரு நடிகராக வலம் வருவது என வயிறு வலிக்க சிரிக்க வைத்தாலும், மனைவி உடனான மோதல், பிரிவு பற்றி பேசி கவலைப்படும் காட்சியில் அசால்டாக நடித்து பார்வையாளர்களை கலங்கடித்து விடுகிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் மிதிலா பாஸ்கர்,அஞ்சுகுரியன் ஆகியோர் அழகும் இளமையுமாக இருக்கிறார்கள்.இவர்களில் மிதிலா பாஸ்கர் வேடம் சில இடங்களில் கோபமூட்டுவதாக இருக்கிறது. மேலும் மிகவும் பப்லியான பெண்ணாக நடித்திருக்கும் இவர் நடித்திருக்கும் வெப் தொடர்களில் எப்படி நடிப்பாரோ அதேபோன்ற ஒரு நடிப்பையே இந்த படத்திலும் கொடுத்து கவர்ந்திருக்கிறார்.அஞ்சுகுரியன் வேடம் இதமானதாக இருக்கிறது.

ருத்ராவின் ஃப்ரண்டாக வருபவர் சிறப்பாக நடித்து தனிக்கவனம் பெறுகிறார். அதேபோல் மிதிலாவின் தங்கையாக வரும் நடிகையும் சிறப்பான முறையில் நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார். கருணாகரன் மற்றும் மிஸ்கின் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் வேடங்கள் ரிலீஃப்பாக அமைந்து சூழலை ரெஃப்ரஷ் செய்வதில் ஸ்கோர் செய்து விடுகிறது.

நிர்மல் பிள்ளை, அஞ்சலியாக நடித்திருக்கும் நடிகை, கஸ்தூரி, ரமேஷ் பிரபா ஆகியோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மியூசிக் டைரக்டர் ஜென் மார்டின் இசையில் பாடல்கள் துள்ளலாக அமைந்திருக்கிறது. கதையின் போக்க்கு ஏற்ற வகையில் பின்னணி இசை காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது.

கேமராமேன் ஹரிஷ் கண்ணன், ஒளிப்பதிவில் கலர்ஃபுல்லாகவும் ரிஃப்ரெசிங் ஆகவும் இருக்கிறது. குறிப்பாக வெளிப்புற காட்சிகள் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் அவை கதை ஓட்டத்திற்கும் நன்றாக உதவி இருக்கிறது.

கதைக்களம் போல் காட்சிகளையும் இளமை துள்ளலோடு படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரணவின் பணியும் நேர்த்தி.

படத்தின் கதையில் புதுமை என்று எதுவும் இல்லைதான். இந்த மாதிரியான கதைக்களங்கள் நாம் ஏற்கனவே பார்த்து பழகியதுதான் இருந்தாலும் காட்சி அமைப்புகள் புதுமையாகவும் பிரஷ்ஷாகவும் இருப்பது மோஸ்ட் பிளஸாக அமைந்திருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகள் என்ன நடக்கப் போகிறது என்பது முன்பே யூகிக்கும்படி இருக்கிறது என்பதும் உண்மைதன். ஆனால் கேரக்டர் செலக்ஷனும் , நடித்த நடிகர்களும் ஃபிரஷ்ஷாக இருப்பதும் அதற்கு ஏற்றார் போல் காமெடிகளும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதும் பக்கபலமாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க மேக்சிமம் உதவி இருக்கிறது. இந்த கால இளைஞர்களை மனதில் வைத்துக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கும் டைரக்டர் தன் கணிப்பில் ஜெயித்து விட்டார்.

மொத்ததில் – ரிலாக்ஸான மூவி

மார்க் 3.5/5