நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019: (அக்டோபர் -26ஆம் தேதி இரவு 8:00 மணிக்கு)!

நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019: (அக்டோபர் -26ஆம் தேதி இரவு 8:00 மணிக்கு)!

தமிழகத்தில் கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கொண்டாடும் வகையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆண்டு தோறும் மகுடம் விருதுகள் விழாவை நடத்தி சாதனைத் தமிழர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், மூன்றாம் ஆண்டாக 2019ம் ஆண்டுக்கான மகுடம் விருதுகள் விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கிருபாகரன், மகாதேவன், சுப்பிரமணியம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், கல்வியாளார்கள், தொழிலதிபர் கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறந்த நடிகருக்கான விருதை பேரன்பு படத்துக்காக நடிகர் மம்முட்டியும், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் படங்களுக்காக நடிகர் விஜய் சேதுபதியும் பெற்றுக்கொண்டனர். சிறந்த நடிகைக்கான விருது கனா படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது, பேரன்பு படத்திற்காக இயக்குநர் ராமுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த தொழில்முனைவோருக்கான விருதை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர்.நாகராஜ் பெற்றுக்கொண்டார். சிறந்த தொழில் ஆளுமைக்கான விருது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது.

அந்தவகையில் தமிழகத்தில் தனி முத்திரைப்பதித்த திறமையாளர்களை அங்கீகரித்து சுமார் 10 பிரிவுகளில் 13 பேருக்கும், தமிழருக்கு பெருமை சேர்த்த தமிழர் பெருமிதம் என்ற சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.2019ம் ஆண்டுக்கான இந்த மகுடம் விருதுகள் விழா நிகழ்ச்சி வரும் அக்டோபர் -26ஆம்தேதி சனிக்கிழமை இரவு 8:00 மணிக்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது..

Related Posts

error: Content is protected !!