இந்திய விமானப்படை நாளின்று!

இந்திய விமானப்படை நாளின்று!

பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஓர் அங்கமாக அக்டோபர் 8, 1932-ல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில், பர்மாவிலிருந்து ஜப்பானியப் படைகள் முன்னேறிவருவதைத் தடுக்கும் பணியில், இந்திய விமானப்படை மிகச் சிறப்பாகச் செயலாற்றியதால், `ராயல்’ என்ற பெயரை இந்திய விமானப்படைக்கு வழங்கி கௌரவித்தது ஆங்கிலேய அரசு. அதன் பிறகு `ராயல் இந்திய விமானப்படை’ ஆகப் பெயர் மாற்றம் பெற்றது.

இந்திய விமானப்படை. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய அரசுக்குக் கீழ் செயல்பட்டு வந்த விமானப்படை இந்திய அரசின் கீழ் செயல்படத் தொடங்கியது. அப்போதும் `ராயல் இந்திய விமானப்படை’ என்றே பெயர் பெற்றிருந்தது. 1950-ம் ஆண்டு, இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு, குடியரசு நாடாக மாறிய பின்னர் `ராயல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு `இந்திய விமானப்படை’ என்று பெயர் மாற்றப்பட்டது. அப்படியாக நம் விமானப்படை, 1932 அக்டோபர் 8ல் உருவாக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாகவும், விமானப்படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் அக்டோபர் 8ஆம் தேதி, இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

1950-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை இந்திய விமானப்படை பாகிஸ்தானுடன் நான்கு போர்களிலும், சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டிருக்கிறது. ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத் (Meghdoot), ஆபரேஷன் காக்டஸ் (Cactus), ஆபரேஷன் பூமாலை (Poomalai) உள்ளிட்ட முக்கிய வான்வெளி ஆபரேஷன்களை இந்திய விமானப்படை நிகழ்த்தியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளிலும் இந்திய விமானப்படை பங்கெடுத்திருக்கிறது. மேலும், பேரிடர் காலங்களில், மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படை சிறப்பாகச் செயலாற்றியிருக்கிறது.

error: Content is protected !!