குரூப் 2 & குரூப் 2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பு- டிஎன்பிஎஸ்சி வெளியீடு!

குரூப் 2 & குரூப் 2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பு- டிஎன்பிஎஸ்சி வெளியீடு!

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் மொத்தம் 645 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 (ஏ) தேர்வில் குறைந்தபட்சம் 2,000 காலியிடங்களாவது வரும் என டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வெறும் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் இருப்பதால அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், குரூப்-2 , குரூப்-2(ஏ) தேர்வில் 645 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் அப்செட்டில் ஆழ்ந்துள்ளனர்.

முக்கிய தகவல்கள்:

  • மொத்த காலியிடங்கள்: 645
    • குரூப் 2 சேவைகள் (நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகள்): 50 காலியிடங்கள்
    • குரூப் 2ஏ சேவைகள் (நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள்): 595 காலியிடங்கள்
  • விண்ணப்ப தேதி: ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜூலை 15, 2025 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 13, 2025 அன்று முடிவடைகிறது.
  • விண்ணப்ப திருத்த சாளரம்: விண்ணப்பங்களை திருத்துவதற்கான வாய்ப்பு ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20, 2025 வரை வழங்கப்படும்.
  • தேர்வு முறை: இத்தேர்வு முதற்கட்டமாக ஒரு பொதுவான முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) மற்றும் அதற்குப் பிறகு குரூப் 2 மற்றும் குரூப் 2A சேவைகளுக்கு தனித்தனி முதன்மைத் தேர்வுகள் (Main Examination) என இரண்டு நிலைகளில் நடைபெறும். நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வும் நடைபெறும்.
  • முதல்நிலைத் தேர்வு தேதி: முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெற உள்ளது.
  • பதவிகள்: இந்த தேர்வின் மூலம் சார்-பதிவாளர் (Sub-Registrar), உதவி தொழிலாளர் ஆய்வாளர் (Assistant Inspector of Labour), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (Junior Employment Officer), உதவி (Assistant), முதுநிலை வருவாய் ஆய்வாளர் (Senior Revenue Inspector) போன்ற பல்வேறு முக்கிய அரசுப் பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in அல்லது apply.tnpscexams.in மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன், விரிவான அறிவிப்பை கவனமாகப் படித்து, தகுதி அளவுகோல்கள், வயது வரம்பு, கல்வித் தகுதிகள், தேர்வு முறை மற்றும் பிற விவரங்களை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும் என்றும் அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்படு்ம பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது