நார்வே செஸ் தொடர் நிறைவு!

நார்வே செஸ் தொடர் நிறைவு!

பிரக்ஞானந்தா உலகின் முன்னணி வீரர்களை வீழ்த்தியதன் மூலம், இந்தியாவில் பிரபலமடைந்த நார்வே செஸ் தொடர் நிறைவடைந்திருக்கிறது. நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முன்னணி வீரர்கள் மட்டுமே பங்கு கொண்ட ஆட்டம் என்பதால், சவால் நிறைந்த தொடராக இருந்தது. நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கார்ல்சன் பாபியானோவை வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 54 லட்சமும், நகமுராவுக்கு ரூ.27 லட்சமும், பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இதேபோல், மகளிர் பிரிவில் சீனாவின் ஜுவெஞுன் முதலிடம் பிடித்தார் . பெண்கள் பிரிவில் பங்கேற்ற பிரக்ஞானந்தா சகோதரி வைஷாலி, கடைசி சில போட்டிகளில் சொதப்பிவிட நான்காவது இடத்தை நிறைவு செய்தார். இத்தொடரில் எல்லோரும் பிரக்ஞானந்தா, அவரது அக்கா வைஷாலி பற்றியே பேசுகிறார்கள். இவர்களுடன் மற்றொரு இந்திய வீராங்கனையும் இத்தொடரில் இருந்தார்.

கோனேறு ஹம்பி என்ற வீராங்கனை பெண்கள் பிரிவில் ஐந்தாம் இடத்தினை பிடித்தார். இத்தொடரில் ஹம்பி – வைஷாலி இடையேயும் இரண்டு சுற்று போட்டிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் தலா ஒரு சுற்று வெற்றியும் பெற்றனர்.

error: Content is protected !!