வட கொரியா நேற்று ஏவுகணை சோதனை!

வட கொரியா நேற்று ஏவுகணை சோதனை!

தென் கொரிய அதிபராக யூன் சுக் யியோல் நாளை மறுநாள் பதவியேற்க உள்ள நிலையில், வட கொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது அந்த பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வட கொரியா நேற்று மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து, தென் கொரியாவின் முப்படை தலைமை தளபதி கூறியதாவது:– வட கொரிய ராணுவம், மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதித்துள்ளது. நாட்டின் கிழக்கில், சின்போர் துறைமுக நகருக்கு அருகே உள்ள கடல் பகுதியில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறி உள்ளார்.

இந்த ஏவுகணை சோதனையை, ஜப்பான் ராணுவ அமைச்சகமும் உறுதிப்படுத்தி உள்ளது. இதையடுத்து எந்தவித சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி, ராணுவ அதிகாரிகளுக்கு, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!