நோபல் பரிசுக்கு வந்த சோதனை பாரீர்!

நோபல் பரிசுக்கு வந்த சோதனை பாரீர்!

சர்வதேச அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப் படுவது வழக்கம். இந்த பரிசை அறிவிக்கும் ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் கேத்தரீனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு வழங்கப்பட வேண்டிய நோபல் பரிசு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வருகிற மே மாதம் 3-ஆம் தேதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இலக்கியத்திற்கான நோபல் பரிசும் இந்த ஆண்டு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசானது அடுத்த ஆண்டுக்கான நோபல் பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக இலக்கிய படைப்புகளுக்கான நோபல் பரிசு தேர்வுக்குழுவிலிருந்த உறுப்பினர்கள் பலர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினர்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு மட்டுமின்றி 2019-ம் ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது கேள்விக் குறியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன், “தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை”, என்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!