ஐ.நா. அமைதிப் படையில் தீவிரவாதிகளால் பலியாகும் வீரர்களில் இந்தியர்களே அதிகம்!

ஐ.நா. அமைதிப் படையில் தீவிரவாதிகளால் பலியாகும் வீரர்களில் இந்தியர்களே அதிகம்!

உலக நாடுகளின் பொது சபையான ஐ.நா. அமைதிப் படையில் 128 நாடுகளைச் சேர்ந்த 1,04,184 வீரர்கள் பணியாற்றி வந்தனர். அதே படையில் 8,108 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஐ.நா. அமைதிப் படைக்கு அதிக வீரர்களை அனுப்பியுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள், அமைதிப் படையில் பணியாற்றியுள்ளனர்.

ஆனால் அமைதிப் படையின் பணிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு மட்டுமே உள்ளது. இந்த கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.

இந்த விவகாரம் குறித்து ஐ.நா.வுக்கான இந்திய ராணுவ ஆலோசகர் கர்னல் சந்தீப் கபூர் ஐ.நா. சபையில் பேசியபோது, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. அமைதிப் படைக்கு அதிக அளவில் வீரர்களை அனுப்பி வருகின்றன. ஆனால் அமைதிப் படையின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இந்தியாவுக்கு இடம் அளிக்காதது துரதிஷ்டவசமானது. இதுதொடர்பாக ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதனிடையே ஐ.நா.சபை அமைதிப் படையில் இப்போது 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் அமைதிப் படையினரில் 3,737 பேர் தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் இறந்துள்ளனர். இவர்களில் இந்திய வீரர்கள்தான் அதிகம். இந்தியாவைச் சேர்ந்த 163 பேர் பணியின்போது இறந்துள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. ஐ.நா.சபையின் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து.

error: Content is protected !!