மருத்துவத்திற்கான நோபல் பரிசு : அமெரிக்காவைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு : அமெரிக்காவைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு.

வ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு, உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் இன்று(அக்டோபர் 2), இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இனி அடுத்தடுத்து அக்டோபர் 9ஆம் தேதி வரை வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படும். அக்டோபர் 3ஆம் தேதி, இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும்.

அக்டோபர் 4ஆம் தேதியன்று, இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

அக்டோபர் 5ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

அக்டோபர் 6ஆம் தேதி, மதியம் 2:30 மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

அக்டோபர் 9ஆம் தேதியன்று, மதியம் 3:15 மணிக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

நோபல் பரிசு வென்றவர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு கூடுதலாக சுமார் எழுபது லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். இந்த ஆண்டு பரிசு பெறுவோர் மொத்த வெகுமதியாக 8 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுவார்கள் என்று நோபல் விருதுகளை நிர்வகிக்கும் நோபல் அறக்கட்டளை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பரிசுத் தொகை சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அறக்கட்டளையின் வலுவான நிதி நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டு தொகையின் அளவை அதிகரிப்பதாக விருது வழங்குவோர் தெரிவித்தனர்.

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார்.

2023-ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக பயனுள்ள எம்.ஆர்.என்ஏ (mRNA) தடுப்பூசிகளை உருவாக்கியதற்காக’ இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸில் உள்ள மரபு சங்கிலியான RNAவில் பல பிரதிகள் இருக்கும். இதில் ஒன்றுதான் mRNA. இந்த mRNA பிரதியை தனியாக பிரித்தெடுத்து, அதைபோலவே போலியான ஒன்றை உருவாக்கி அதை உடலுக்குள் செலுத்தினால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், போலியான mRNAவை எதிர்த்து சண்டை செய்யும். பின்னர் இதேபோன்று எப்போதாவது உண்மையான mRNA வந்தாலும் அதற்கு எதிராக சண்டை செய்து, தொற்று பாதிப்பிலிருந்து மனிதனை காப்பாற்றிவிட முடியும். இதை அடிப்படையாக கொண்டுதான் தடுப்பூசிகளை ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!