தமிழ்நாடு அரசு விருதுகளில் பெண்களுக்கு இடமில்லையே? என்ற கேள்விக்கு இதுவா பதில்?

தமிழ்நாடு அரசு விருதுகளில் பெண்களுக்கு இடமில்லையே? என்ற கேள்விக்கு  இதுவா பதில்?

மிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

◾️ திருவள்ளுவர் விருது – தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி

◾️ பேரறிஞர் அண்ணா விருது – பத்தமடை பரமசிவம்

◾️ பெருந்தலைவர் காமராசர் விருது – உ.பலராமன்

◾️ மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பழநிபாரதி

◾️ பாவேந்தர் பாரதிதாசன் விருது – எழுச்சிக் கவிஞர் முத்தரசு

◾️ தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – ஜெயசீல ஸ்டீபன்

◾️ முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – முனைவர் இரா.கருணாநிதி

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ₹2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

இப்போது இந்த  தமிழ்நாடு அரசு விருதுகளில் பெண்களுக்கு இடமில்லையே? என்ற கேள்விக்கு பதிலாக மார்ச் 8 மகளிர் தினம் அன்று ஔவையார் விருது வழங்கப்படுகிறது..
என்பதை பதிலாக முன்வைக்கின்றனர்.

இதற்கான பதிலை அவர்களிடம் எதிர் நோக்குகின்றேன்..

1. அவ்விருது சமூகநலத்துறையால் வழங்கப்படும் விருது.மகளிர் தின சிறப்பு விருது.

2. சென்னையில் மின்தொடர் வண்டியில் பெண்களுக்கென 3 பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் (அதிலும் கால் பகுதி முதல் வகுப்புக்கு என்று ஒதுக்கி இருப்பார்கள்) பொதுப் பெட்டியில் பெண்கள் பயணிக்கும் பொழுது சிறிது தள்ளி உக்காருங்க, தள்ளி நில்லுங்க என்று கூறினால் எரிச்சல் அடையும் ஆண்கள் “அதான் பெண்களுக்கென பெட்டி இருக்குல்ல அதில் வர வேண்டியதுதானே ? ஏன் எங்கள் பெட்டியில் வந்து எங்களுக்கு இடைஞ்சல் செய்றீங்க? என்று அபத்தமாக கேட்பார்கள். அப்போது எல்லாம் நாங்கள் சொல்வோம் ஆமா இந்த ஒட்டுமொத்த ரயிலிலும் மூன்று பெட்டிகள் மட்டும் பெண்களுக்கு, ஒட்டுமொத்த பெட்டிகளும் ஆண்களுக்கு என்று எழுதிக் கொடுத்துட்டாங்களா? இவை பொதுப் பெட்டி. ஆண்களுக்கு மட்டும் சொந்தமல்ல.. பெண்களுக்கு ஏன் தனிப்பெட்டி தரப்பட்டிருக்கிறது என்பதை விளக்குவோம்.” அது போலத்தான் இன்று பலருக்கும் விளக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது .

தமிழ்நாடு அரசு அறிவித்த பொது விருதுப் பட்டியலில் இடமில்லையே என்றால் சமூக நலத்துறை வழங்கும் மார்ச் 8 மகளிர் தின விருதுடன் ஒப்பிட்டுக் கூறுவது அபத்தமானது .

தேர்தலில் ரிசர்வ் தொகுதியில் மட்டுமே பட்டியலின மக்கள் போட்டியிட வாய்ப்பு தருவது சமூக நீதியா? பொது இடங்களில் ஏன் வாய்ப்பில்லை என்று இனி கேட்கக் கூடாதா?

வேலைவாய்ப்பில்; கல்வியில் பொதுப்பிரிவில்: பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், பட்டியல் இனத்தவர்க்கு இடம் கிடையாதா?

மனிதி செல்வி

error: Content is protected !!