32°C
விளம்பரம்
Advertisement

ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் கலந்து 3 மாத ஆஸ்திரேலிய குழந்தை!

admin சேலம் Published: September 25, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஜெசிந்தா ஆர்டெர்ன் . நியூசிலாந்து நாட்டில்  37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார்.   நியூசிலாந்து  டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் என்பவருடன் வாழ்ந்து வந்த ஜெசிந்தா, கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவுக்கு அடுத்த படியாக பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்ற பெண் என்ற பெயரை ஜெசிகா பெற்றார்.

இந்நிலையில், நியூயார்க்கில் ஐ.நா.சபை பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.  நெல்சன் மண்டேலா அமைதி மாநாடு என்று குறிப்பிடப்பட்ட இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பல் வேறு விஷயங்கள் குறித்துப் பேசி வருகின்றனர். இதில் நியூசிலாந்தின் பெண் பிரதமர் ஜெசிந்தா அர்டெர்னுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. தனது குழந்தையுடன் பிரதமருக்கான பணிகளை வீட்டில் இருந்தே கவனித்துவரும் ஜெசிந்தா, ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்பாரா, அல்லது பிரதிநிதியை அனுப்புவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், யாரும் எதிர்பாரா சூழலில் தனது 3 மாதக் குழந்தை நேவ் டி அரோஹாவை சுமந்துகொண்டு ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். பிரதமர் ஜெசிந்தாவுக்குத் துணையாக அவரின் கணவர் கிளார்க் கேபோர்ட் உடன் வந்திருந்தார். கிளாபோர்ட் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

மிகுந்த பாதுகாப்பு நிறைந்த பகுதி என்பதால், அடையாள அட்டையின்றி யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதால், இருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தன்னுடைய நேரம் வந்ததும் பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் எழுந்து பேசும் போது, குழந்தையைக் கணவர் கிளார்க் கேபோர்டிடம் ஒப்படைத்துவிட்டுப் பேசி முடித்தார்.

பெண் தலைவர் ஒருவர் ஐநா கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதால் ஜெசிந்தா சாதனை படைத்துள்ளார். அவரது 3 மாதக் குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐநாவின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருக்கிறது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்