நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் ஜாப் இருக்குது!

நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் ஜாப் இருக்குது!

மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் 2072 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

job oct 4

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Commissioners:

2 இடங்கள் (பொது – 1, ஒபிசி – 1).

தகுதி:

இலக்கியம்/ கலை/ அறிவியல்/ வணிகவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடங்களில் முதுநிலை பட்டம் மற்றும் ரூ.10000 – 325 – 15,200 சம்பளத்தில் முதல்வர் பதவி வகித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.15,600 – 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.

வயது:

31.7.2016 அன்று 45க்குள்.

2. Principals:

40 இடங்கள் (பொது – 22, ஒபிசி – 10, எஸ்சி – 6, எஸ்டி – 2).

தகுதி:

50% தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம். பள்ளிகளில் துணை முதல்வர் பதவி வகித்திருக்க வேண்டும். 12 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.15,600 – 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.

வயது:

31.7.2016 அன்று 35லிருந்து 45க்குள்.

3. Post Graduate Teachers: (PGT):

பாட வாரியாக பணியிடங்கள் விவரம்:

அ. Biology:

77 இடங்கள் (பொது – 44, ஒபிசி – 17, எஸ்சி – 15, எஸ்டி – 1).

ஆ. Chemistry:

90 இடங்கள் (பொது – 46, ஒபிசி – 12, எஸ்சி – 15, எஸ்டி – 17).

இ. Commerce:

52 இடங்கள் (பொது – 20, ஒபிசி – 15, எஸ்சி – 11, எஸ்டி – 6).

ஈ. Economics:

112 இடங்கள் (பொது – 44, ஒபிசி – 23, எஸ்சி – 33, எஸ்டி – 12).

உ. English:

76 இடங்கள் (பொது – 56, எஸ்சி – 11, எஸ்டி – 9).

ஊ. Geography:

56 இடங்கள் (பொது – 32, ஒபிசி – 9, எஸ்சி – 10, எஸ்டி – 5).

எ.  Hindi:

78 இடங்கள் (பொது – 57, எஸ்சி – 12, எஸ்டி – 9).

ஏ.  History:

70 இடங்கள் (பொது – 48, ஒபிசி – 8, எஸ்சி – 9, எஸ்டி – 5).

ஒ.  Maths:

117 இடங்கள் (பொது – 36, ஒபிசி – 25, எஸ்சி – 31, எஸ்டி – 25).

ஓ. Physics:

102 இடங்கள் (பொது – 49, ஒபிசி – 19, எஸ்சி – 15, எஸ்டி – 19).

ஔ. Information Technology:

50 இடங்கள் (பொது – 33, எஸ்சி – 7, எஸ்டி – 10).

தகுதி:

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் முடித்து பி.எட்., முடித்திருக்க வேண்டும். Information Technology பாடத்திற்கு மட்டும் ஐடி பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் பி.இ./ பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர் அறிவியல் பாடப்பிரிவில் எம்.எஸ்சி/ எம்சிஏ/ பி.இ.,/ பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

31.7.2016 அன்று 40க்குள்.

4. Trained Graduate Teachers: (TGT):

பாடவாரியாக காலியிடங்கள் விவரம்:

அ. English:

159 இடங்கள் (பொது – 77, ஒபிசி – 26, எஸ்சி – 19, எஸ்டி – 37).

ஆ. Hindi:

132 இடங்கள் (பொது – 78, ஒபிசி – 28, எஸ்சி – 18, எஸ்டி – 8).

இ. Maths:

229 இடங்கள் (பொது – 99, ஒபிசி – 20, எஸ்சி – 51, எஸ்டி – 59).

ஈ.  Science:

72 இடங்கள் (பொது – 35, ஒபிசி – 6, எஸ்சி – 9, எஸ்டி – 22).

உ. Social Studies:

68 இடங்கள் (பொது – 49, ஒபிசி – 8, எஸ்சி – 2, எஸ்டி – 9).

தகுதி:

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்து CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

31.7.2016 அன்று 35க்குள்.

5. Miscellaneous Teachers

பாடவாரியாக காலியிடங்கள் விவரம்:

அ. Music:

41 இடங்கள் (பொது – 14, ஒபிசி – 21, எஸ்சி – 2, எஸ்டி – 4).

தகுதி:

Music பாடத்தில் 3 வருடம் அல்லது 5 வருட பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 3 வருட பட்டம் பெற்றவர்கள் பி.எட்., படித்திருக்க வேண்டும்.

ஆ. Art :

50 இடங்கள் (பொது – 20, ஒபிசி – 26, எஸ்டி – 4).

தகுதி:

Fine Arts பாடத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் டிப்ளமோ/ முதுநிலை டிப்ளமோ/ பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இ. PET (M):

28 இடங்கள் (பொது – 12, ஒபிசி – 16)

தகுதி:

B.PEd.,/ D.PED போன்ற ஏதேனும் ஒரு படிப்பை படித்திருக்க வேண்டும்.

ஈ. PET (F):

91 இடங்கள் (பொது – 54, ஒபிசி – 21, எஸ்சி – 8, எஸ்டி – 8).

தகுதி:

B.Ped/ D.PEd போன்ற ஏதேனும் ஒரு படிப்பை படித்திருக்க வேண்டும்.

உ. Librarian:

45 இடங்கள் (பொது – 35, ஒபிசி – 10).

தகுதி:

B.L.I.Sc பட்டம் அல்லது ஏதாவததொரு பட்டப்படிப்புடன் Library Science பாடத்தில் ஒரு வருட டிப்ளமோ.

மூன்றாவது மொழியின் பாடம் என்ற பிரிவின் கீழ் தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தமிழ் பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

31.7.2016 அன்று 35க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.1000. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

www.nvshq.org அல்லது www.mecbsegov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.10.2016.

Related Posts