நாடெங்கும் ‘ஒரே வாகனம், ஒரே பாஸ்டேக்’ திட்டம் அமல்!

நாடெங்கும் ‘ஒரே வாகனம், ஒரே பாஸ்டேக்’ திட்டம் அமல்!

சுங்கச்சாவடிகளில் வாகனங்களிடம் ரொக்கமாகவோ, டிஜிட்டல் பணபரிமாற்றம் மூலமாகவோ கட்டணம் வசூலித்தால், வாகனங்கள் தேங்கி போக்குவரத்து நெரிசல் உண்டாகும். அதை தவிர்ப்பதற்காக, ‘பாஸ்டேக்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ‘பாஸ்டேக்’ வில்லைகளை வாகனங்களில் ஒட்டிக்கொண்டால், சுங்கச்சாவடியை கடக்கும்போது பிரீபெய்டு கட்டணத்தில் இருந்தோ அல்லது அதனுடன் இணைந்த வங்கி சேமிப்பு கணக்கில் இருந்தோ சுங்க கட்டணம் தானாக கழிக்கப்பட்டு விடும். அந்த வகையில் நாடு முழுவதும் 98 சதவீத வாகனங்கள் ‘பாஸ்டேக்’ முறைக்கு மாறிவிட்டன.

அதே சமயத்தில், சிலர் ஒரே வாகனத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ‘பாஸ்டேக்’ வில்லைகளையும், ஒரே வில்லையை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கும் பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. இதை தடுக்க ‘ஒரே வாகனம், ஒரே பாஸ்டேக்’ திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வகுத்தது. இதன்படி, ஒரு வாகனத்துக்கு ஒரு ‘பாஸ்டேக்’ வில்லைதான் பயன்படுத்த முடியும்.

அனைத்து வாகனங்களும் இந்த திட்டத்துக்கு மாறிக்கொள்ள மார்ச் 31-ந் தேதிவரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கால அவகாசம் வழங்கியது. ‘பேடிஎம் பாஸ்டேக்’ புகாரில் சிக்கியதால், அதன் பயனாளர்கள் வேறு வங்கிக்கு மாறும்படி ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய கால அவகாசம் முடிந்தநிலையில், நேற்று ‘ஒரே வாகனம், ஒரே பாஸ்டேக்’ திட்டம் அமலுக்கு வந்தது.

error: Content is protected !!