கோலிவுட்டுக்கு 6 தேசிய விருதுகள்! – முழு விபரம்!!

கோலிவுட்டுக்கு 6 தேசிய விருதுகள்! – முழு விபரம்!!

த்திய அரசால் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த இயக்குனர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இன்று அரிவிக்கப்பட்டன் கடந்த வருடம் கொரோனா மற்றும் ஊரடங்கால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ’அசுரன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.அசுரன் திரைப்படம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கலைப்புலி தாணு தயாரிப்பில் 2019 அக்டோபரில் வெளியான படமிது . பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த தனுஷூக்கு ஆடுகளத்தை அடுத்து தற்போது இரண்டாம் முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த படமாகவும் ‘அசுரன்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. 2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்துடன் வெளியானது. தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இதில் இடம் பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்ததாக்கும்.

மேலும் அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்குச் சிறந்த நடிகருக்கான விருதும் தியாகராஜன் குமாரராஜா டைரக்‌ஷனில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்து சபாஷ் வாங்கிய விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கான தகுதியை அடைந்துள்ளார்(கள்) .

பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு சிறப்பு தேசிய விருது (jury award) மற்றும் சிறந்த ஒலிப்பதிவு (ரசூல் பூக்குட்டி) என இரண்டு விருதுகள் அறிவிப்பு.

கேடி(எ)கருப்புதுரை படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிப்பு. எழுத்தாளர் மு.ராமசாமி, சிறுவன் நாகவிஷால் நடிப்பில் உருவான இந்த படம் முதியவர்களை கருணைக் கொலை செய்வதை மையமாகக் கொண்ட இப்படத்தில் நாக விஷால் ஆக்டிங் காண்போரின் மனசை அள்ளிய நிலையில் இப்போது அவார்ட் கிடைத்திருக்கிறது..

மேலும் சிக்கிம் மாநிலம் சிறந்த சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது. திரைத்துறைக்கான சிறந்த மாநிலம் தேசிய விருது சிக்கிம் மாநிலத்துக்கு அறிவிப்பு..

சிறந்த நடனக் கலைஞராக ராஜூ சுந்தரத்துக்கு தேசிய விருது அறிவிப்பு

சிறந்த இந்தி திரைப்படத்துக்கான விருது மறைந்த சுஷாந்த் நடித்த சிச்சுசோரேவுக்கு அறிவிப்பு

மணிகர்னிகா, ஜான்சி ராணி மற்றும் ‘பங்கா’ படங்களில் நடித்த நடிகை கங்கனா ரணாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு

சிறந்த சினிமா விமர்சகருக்கான தேசிய விருது கொல்கத்தாவை சேர்ந்த சோஹினி சத்தோபத் யாயாக்கு அறிவிப்பு

நானி நடிப்பில் வெளியான ஜெர்சி திரைப்படத்திற்கு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு

அவனே ஸ்ரீமன் நாராயணா கன்னட திரைப்படத்தில் சிறந்த சண்டை பயிற்சியாளராக விக்ரம் மோருக்கு தேசிய விருது அறிவிப்பு

சிறந்த குடும்பத் திரைப்படமாக பாதிர ஸ்வப்னம் என்ற மலையாள திரைப்படம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

சிறந்த ஒப்பனை, சிறந்த அறிமுக இயக்குனர் என இரண்டு தேசிய விருதுகளை வென்றது ஹெலன் (மலையாளம்) திரைப்படம்.

சிறந்த அனிமேசன் திரைப்படமாக ராதா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!