June 7, 2023

சினிமாவுக்கான கதை தயார் செய்வதில் மிகவும் சிரமமான விஷயம் காமெடிக் காட்சிகளுடனான சீன்களை உருவாக்குவதுதான். அழ வைக்க வேண்டுமென்றால் செண்டிமெண்டாக டயலாக் பேச வைத்து நடிக, நடிகைகளை கொஞ்சம் ஓவர் செய்ய வைத்தாலே போதும். கூடவே அவர்களின் பிரச்னையைச் சின்னதாகத் தூண்டிவிட்டாலும் அழத் தயாராகி விடுவார்க்கள். மெகா சீரியல்கள் சக்கைப் போடு போடுவறதுக்கு இந்த சைக்காலஜிதான் காரணம். ஆனா சிரிப்பை, நினைத்த நேரத்தில் வர வைக்க முடியாது. ரசிகர் எனப்படும் பார்வையாளர்களின் பிரச்னைகளைத் தாண்டி அவங்களைச் சிரிக்க வைக்க வேண்டும். அதிலும் துக்கடாத்தனமான நடிகர்களை முன்னிலைப்படுத்தி ஒரு முழு நீள சிர்ப்புப் படமெடுத்து அதை ரசிகர்களிடம் சென்றடையை வைக்க பகீரத பிரயத்னம் செய்ய வேண்டும். ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் தமிழ் ரசிகர்களின் சிரிப்பலையை ஏற்படுத்திய காமெடி நேம் அல்லது டைட்டில் ஒன்று கிடைத்தால் ஜெயித்து விடலாம் என்று அலட்சியமாக உருவாக்கப்பட்டு களமிறங்கிய படம்தான் நாய் சேகர்.. படம் ஆரம்பிக்கும் போதே “காமெடி படத்தில் லாஜிக் பார்க்காதீர்கள்” என்று கண்டிஷன் போட்ட மற்றும் ‘இன்னுமா இதையெல்லாம் காமெடின்னு சிரிச்சிட்டு இருக்கீங்க’ என்று வசனத்தைக் கூட உபயோகப்படுத்தியும் எடுபடாமல் போனதுதான் சோகம்!

படத்தின் கதை என்னவென்றால் ஐடி ஒன்றில் செய்து வரும் வேலையை விட்டு எப்போது தூக்குவார்கள் என கலக்கத்துடன் வேலை பார்த்து வருகிறார் சதீஷ். எல்லோரிடமும் எரிந்து விழுபவர் ஆபிஸில் பவித்ரா லட்சுமியை காதலிக்கிறார். அவருக்கு பக்கத்து வீட்டில் ஆராய்ச்சி யாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். அந்த ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதீஷை திடீரெனக் கடித்து விடுவதால் நாயின் டிஎன்ஏ அவருக்குள் பரவி நாயின் குணாதிசயங்கள் சதீஷுக்கு வருகிறது. அதே சமயம் நாய்-க்கு மனித குணங்கள் வருகிறது. இப்பிரசனையால் சதீஷ் வாழ்க்கையில் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க மாற்று மருந்து தயாரான நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது. இதன் பின் என்ன என்பதே நாய் சேகர்.

காமெடியனாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் சதீஷ் முதல்முறையாக கதை நாயகனாக நடித்திருக்கும் படம். கொஞ்சம் தப்பித்திருக்கிறார் என்றே சொல்லலாம். காமெடியன் என்பதால் படத்தில் பெரிதாக ஹீரோ வேலையெல்லாம் இல்லை. காமெடி செய்யும் போது என்ன செய்து கொண்டிருந்தாரோ அதையே பெரும்பாலான நேரம் செய்திருக்கிறார். கூடவே கொஞ்சம் காதலும் டான்ஸும் செய்திருக்கிறார். நாயின் குணாதிசயங்கள் அவருக்குள் வந்தவுடன் நாயைப் போல் செய்வது, பின்னர் அதை உணர்ந்து வருந்துவது என கொஞ்சம் நடிக்க முயற்சியும் செய்திருக்கும் சதீஷூக்கு பேஸ் மாடுலேசன் சுட்டுப் போட்டாலும் வரவில்லை… இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இப்படத்தில் நடிகராக திரையில் தோன்றி பாடல்கள் பாடி அசத்திய்படி செய்யும் வில்லன் ரோல் ஸ்மைலியை வரவழைக்கிறது..

எடுக்கப்படும் கதைக்கு ஓரளவு உழைத்திருக்கும் இயக்குநர் கிஷோர் இது முழுமையாக குழந்தைகளுக்கான படம் என்பதை முடிவு செய்து எடுத்திருக்கலாம்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

மொத்தத்தில் நாய் சேகர் – சின்னத்திரையில் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்

மார்க் 2.75 / 5