என் நெற்றி என் இஷ்டம்!

என் நெற்றி என் இஷ்டம்!

பாஸ்டன், இலையுதிர் காலம் ஆரம்பிக்க போகும் செப்டம்பர். கேம்பிரிட்ஜ் ஏரியா .நூறு நாடுகளில் இருந்து வந்த பெற்றோர்கள் கூட்டம். அந்த கல்லூரியில் அதிகபட்ச வித்தியாசம் பேண அதிக நாடுகளில் இருந்து மாணவர்களை எடுப்பார்கள். இந்தியாவில் இருந்து இருவர், எகிப்தில் இருந்து ஒருவர் என அப்ளை செய்தால் மார்க் பார்க்காமல் எகிப்து ஒன்று, இந்தியா ஒன்று என அட்மிஷன் கொடுக்கும் பல்கலைகழகம் அது.முதல் நாள் ஃபார்மல் பேண்ட், வெள்ளை டாப்ஸ், ஸ்ட்ரையிட் செய்யப்பட்ட முடி என கலந்துக்கொண்டேன்.மறு நாள் டீ பார்ட்டி, உணவு நேரம் இருந்தது அப்பொழுது ப்ளையின் சிவப்பு புடவை, பொட்டு எனச்சென்றேன். மிக வித்தியாசமாய் கூட்டத்தில் தெரிந்தாலும் பலர் அழகாய் இருக்கு என பாராட்டினர். இதான் நான். எந்த நாடாகினும் என் உடையை நான் தேர்வு செய்வேன். ( டிரஸ் கோடும் பார்த்தே).

என் அப்பா இறந்து 28 வருடங்கள். அம்மா ஆரம்பத்தில் பொட்டு இல்லை. வற்புறுத்தலில் கறுப்பு பொட்டு. அம்மா அத்தனை அழகு. ஆனால் பூ வைப்பதில்லை. இதற்கு எல்லாம் இன்னமும் போராட்டமே. நவராத்திரியில் சுமங்கலி பூஜை என்பதால் பலர் கணவரை இழந்தவர்களை அழைப்பதே இல்லை. பொட்டுக்கு பின் இருக்கும் பெண்களின் அரசியலாவது இந்த கேடுக்கெட்ட, அறிவற்ற, மூளையில்லாத ச.கிகளுக்கு தெரியுமா?இவர்கள் பெண் உரிமையில் கை வைப்பார்கள் என. ஒவ்வொரு டி.வி யிலும் , யூ டியுபிலும் அலறிக்கொண்டு இருக்கேன். வைத்தே விட்டார்கள்.

நான் சனாதனி என படம் போட்ட பிரபலத்திடம். நான் கேட்டேன். நீங்கள் சனாதனி எனில் நாளை உங்கள் பொட்டை அழிப்பார்கள் என. அவர் துணிவாய் வாழும் சிங்கிள் வுமன். ச.கிகளுக்கு அவர் சனாதனி அல்ல. ” விதவை’ காட்டமாய் தெரிந்தே பேசுகிறேன்

இந்தியா இன்னொரு ஆப்கனாக மாறும். மதவாதம் பெண்களின் இடுப்பில் தார் அடிக்க சொல்லும். இன்னும் எத்தனை கேடுகள் இந்த நாட்டில் ஏற்பட போகிறதோ? பெண்ணை சமமாய் நடத்தும் ஸ்காண்டினேவியா நாடுகள் மேலே வரும். மதவாத நாடுகள் கீழே செல்லும். இந்த அடிபடை அறிவே இல்லாததுதான் இந்துத்வா அமைப்புகள். கேட்டா நீ தெய்வம் என உளறி நம்மை அடிமையாய் வைப்பார்கள் இப்பொழுது புதிதாய் நோ பிந்தி, நோ பிசினஸ் என ஹேஷ் டேக் வைக்கிறார்கள். இந்து பெண்களை இழிவு படுத்தும் செயல் .என் பாட்டி பொட்டு வைக்கல, நாங்க வைக்கிறோம், என் மகள்கள் பொட்டு வைப்பதில்லை. பொட்டு வைக்கவும், பொடடில்லாமல் இருப்பதற்கும் பெரும் உரிமை போராட்டம் 100 ஆண்டுகளாக இந்த நாட்டில் நடத்தி வருகிறோம்.

இதெல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்ட ,அறிவில்லா மத ஜென்மங்களுக்கு எங்கே புரியும்? துளிக்கூட அறிவு என்பதே இல்லாமல் தன் தாயை, சகோதரியை, தோழியை, மகள்களை பொட்டு வை, வைக்காதே என இழிவு செய்கிறார்கள்.

அடி மனதில் இருந்து அத்தனை வேதனைப்படுகிறேன். பொட்டுன்னு எளிதில் கடக்க முடியாது.. பெண்களுக்கு எதிராய் ஒன்று நடக்கிறது. அதை எல்லா பெண்களும் எதிர்க்க வேண்டும்.

என் நெற்றி என் இஷ்டம். என் உடலின் மீதி, என் நம்பிக்கையின் மீது, என் மீது உரிமை கொள்ள அரசுக்கும் இடமில்லை. நம் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை அது. இந்திய பெண்களின் உரிமை.

கேடுகெட்ட ச.கிகள் ஒதுங்காவிடில்.

#nobindinovote என்பதை நீங்கள் பேசும் ஸ்டைலுக்கு எதிராய் நாம் பேசுவோம். பொட்டு வைப்பது எம் உரிமை. வைக்காமல் இருப்பதும்.

#mybindimybusiness என்று நாம் பேச வேண்டும்.

முர்மு மேடம் பொட்டு வைக்கவில்லை. இதை அவர்களிடம் பேச போகிறீர்களா? உங்கள் வீட்டிலும் பல பெண்களுக்கு பொட்டு இருக்காது. அவர்களிடம்?
அவள் விகடன் கண்டிக்காமல் கருத்து கேட்கிறார்கள்.இந்த நாடு போகும் பாதை, பெண்களுக்கு எதிரானது.விழிக்காவிடில் மரித்து போவோம். உரிமைகளில்

#NoBindiNoBusiness இந்த ஹேஷ் டேக் பரப்பும் இவர்களுக்கு பெண்கள் என்ன பாடம் தரப்போகிறோம்?

கீர்த்தி

error: Content is protected !!