முருங்கைக்காய் சிப்ஸ் – விமர்சனம்!

முருங்கைக்காய் சிப்ஸ் – விமர்சனம்!

தமிழ் சினிமாக்களில் ஏகப்பட்ட முதலிரவு காட்சிகள் வந்துள்ளன. அவைகளில் பல ரசிக்கும்படியான காட்சி அமைப்புகளும் கொண்டிருந்தன. ஆனால் முழுக்க முழுக்க முதலிரவு என்ற சொல்லாடலைப் பிடித்துக் கொண்டு ஒரே அறையில் ஓரிரவில் மட்டமான ஜோக்ஸை சொல்லிக் கொண்டே இருபதை எல்லாம் கேட்டு இரண்டு மணி நேரத்தை போக்க தயாராக இருந்தால் நீங்கள் தாராளமாக முருங்கைக்காய் சிப்ஸ் படத்தைப் பார்க்கலாம்

கதை என்னவென்றால் ஷாந்தனு, & அதுல்யா ரவி -க்கு திருமணம் நடைபெறுகிறது. அவர்கள் முதலிரவுக்கு ஆயத்தமாகும் போது ஷாந்தனுவின் தாத்தா பாக்கியராஜ் “உங்கள் இருவருக்கும் முதலிரவு நடந்தால் பரம்பரை சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விடுவேன்” என்கிறார். அதே சமயம் அதுல்யா ரவியின் அத்தை ஊர்வசி “உங்கள் இருவருக்கும் இன்னிய முதலிரவு நடக்கவில்லை என்றால் வாழ்க்கை முழுக்க குழந்தை பிறக்காது என்ற தோஷம் ஏற்படும்” என்று கூறுகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் முதலிரவு நடந்ததா? இல்லையா? என்பதுதான் மு.சிப்ஸ்

ஹீரோ சாந்தனு துறுதுறுப்புடன் காமப்பசியுடன் அலையும் இளைஞனாக,. அதுல்யா ரவியும் ரசிகர்களை கவர முயல்கிறார். பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனிஸ்காந்த் ஆகியோரெல்லாம் வந்தார்கள்..போகிறார்கள்..ஏன் என்றெல்லாம் கேட்கப்படாது. முழுக்க முதலிரவே முதலீடு என்பதால் கேமராமேனோ அல்லது இசை அமைப்பாளரோ கொஞ்சமும் மெனக்கெடவில்லை..

அட்வான்ஸ் யுகமாகி போன இக்காலக்கட்டத்தில் யூ ட்யூப்-பில் ஒரு ஸ்டோரியைக் கொடுக்கக் கூட யோசிக்கும் போது ஒரு முழு சினிமாவை கொஞ்சமும் அலசாமல் அதுவும் கோலிவுட்டில் திரைக்கதை மன்னன் என்ற பெயரெடுத்த பாக்யராஜையும் இணைத்து சொதப்பி இருக்கிறார் இயக்குநர்..!

மொத்தத்தில் இந்த முருங்கைக்காய் சிப்ஸ் – நமுத்து போன பண்டம்

மார்க் 2 / 5

Related Posts

error: Content is protected !!