இந்திய மொழிகளில் பாதி இன்னும் 50 வருஷத்தில் அழிந்து போகும்!

இந்திய மொழிகளில் பாதி இன்னும் 50 வருஷத்தில் அழிந்து போகும்!

உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன. உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.

உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில் 6 மொழிகளே பழமைன மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி, சீன மொழி, சமஸ்கி ருத மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி.உலகில் இலத்தீன் மொழியினை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும். உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 80 சதவீத மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்றன மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன.

இந்நிலையில் அடுத்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேல் அழிந்து விடும் அபாயம் உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ‛பீப்புல் லிங்கிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா(பி.எஸ்.எல்.ஐ.,)’ எனும் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வின் முடிவில், ” இந்தியா முழுவதும் வசிக்கும் மக்களால் 780 மொழிகள் சேப்பட்டு வருகின்றன. அடுத்த 50 ஆண்டுகளில் இவற்றில் 400க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது.

கல்வியறிவின்மை மற்றும் பள்ளி செல்லாத காரணத்தால், பழங்குடியின மக்கள் பேசும் மொழிகளுக்கு அழியும் ஆபத்து அதிகம் உள்ளது. இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆயிரம் வருடம் பழமையான மைதிலி(பீகார் பழங்குடியினர் மொழி) உள்ளிட்ட 22 பழங்குடியின மொழிகள் அழியும் அபாயம் உள்ளது.கடந்த 50 ஆண்டுகளில் 250 இந்திய மொழிகள் அழிந்து விட்டது. இவ்வாறு அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!