டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிடச் சென்ற 5 கோடீஸ்வரர்களும் உயிரிழப்பு!

டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிடச் சென்ற 5 கோடீஸ்வரர்களும் உயிரிழப்பு!

டந்த 1912ஆம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி பயன்படுத்தப்படுகிறது. . இதில் ஒரு பைலர் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்தப் பயணத்துக்கு ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து ஓசன் கேட் டைட்டன் நீர்மூழ்கி புறப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் இந்தப் பயணத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 5 கோடீஸ்வரர்கள் பங்கேற்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணம் தொடங்கிய ஒரு மணி நேரம் 45 வது நிமிடத்தில் நீர்மூழ்கியில் இருந்து சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடாவின் கடற்படை கடந்த 4 நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டது.

அந்த நீர் மூழ்கி கப்பலில் ஆக்சிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டு இருந்த 96 மணி நேர கெடு நேற்று காலையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் டைட்டானிக் கப்பலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த 5 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் அது காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் தானா என வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக ஆழ்கடலுக்கு சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே ‘தி சிம்ப்ஸன்ஸ்; தொடர் கணித்திருப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ 2006ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ தொடரின் 17வது சீசனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் 10வது எபிசோடில் பல ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கிய ‘Piso Mojado’ என்ற கப்பலில் இருக்கும் பொக்கிஷங்களை எடுப்பதற்காக நாயகன் ஹோமர் சிம்ப்ஸன் தனது தந்தையுடன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணிக்கிறார்.

பவளப் பாறை ஒன்றில் சிக்கிக் கொள்ளும் நீர்மூழ்கிக் கப்பலில் ஆக்ஸிஜன் குறைந்து ஹோமர் அதில் மாட்டிக் கொள்வது போல காட்டப்பட்டுள்ளது. ஆச்சர்யமூட்டும் இன்னொரு விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானில் இருந்து இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட ஷாஜதா தாவூத் மற்றும் மகன் சுலேமான் தாவூத் இருவரும் தந்தையும் மகனும் ஆவர். நெட்டிசன்கள் இந்த விபத்தை ‘சிம்ப்ஸன்ஸ்’ தொடருடன் ஒப்பிட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!