சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் இருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைஞ்சுட்டாய்ங்க

சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் இருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைஞ்சுட்டாய்ங்க

‛சாட் ஜிபிடி‘ செயற்கை நுண்ணறிவை உருவாக்கிய நிறுவனம் ஓபன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்தவர் சாம் ஆல்ட்மேன் திடீரென்று தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இவர் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இயக்குநர்கள் அடங்கிய குழுவில் உண்மையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் ஓபன் ஏஐ முன்னாள் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் இணை நிறுவனர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து, புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சி குழுவை வழிநடத்துவார்கள் என மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறி உள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்ட நாதெல்லா, “OpenAI உடனான எங்கள் கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றும் எங்கள் தயாரிப்பு வரைபடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம், மைக்ரோசாஃப்ட் இக்னைட்டில் நாங்கள் அறிவித்த அனைத்தையும் தொடர்ந்து புதுமைப்படுத்துவதற்கான எங்கள் திறன் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களைத் தொடர்ந்து ஆதரிக்கிறோம்.

எம்மெட் ஷியர் மற்றும் ஓஏஐ-இன் புதிய தலைமைக் குழுவைப் பற்றி அறிந்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன், சக ஊழியர்களுடன் சேர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சிக் குழுவை வழி நடத்தப் போகிறார்கள் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.”

“அவர்களின் வெற்றிக்குத் தேவையான வளங்களை அவர்களுக்கு வழங்குவதற்கு விரைவாகச் செல்ல நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சாம் ஆல்ட்மேன், அந்த பதிவை குறிப்பிட்டு ‘பணி தொடர்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘சாட் ஜிபிடி’ எனும் சாட் போட்டால் தொழில்நுட்ப உலகில் பல மாற்றங்கள் வந்ததையடுத்து, சாம் ஆல்ட்மேன் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!