மெக்சிகோவின் ரத்த சரித்திரம்: போதை சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியும் எழும் வன்முறையும்!

மெக்சிகோவின் ரத்த சரித்திரம்: போதை சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியும் எழும் வன்முறையும்!

மெக்சிகோ என்றாலே நினைவுக்கு வருவது அதன் அழகிய கடற்கரைகளும் கலாச்சாரமும் மட்டுமல்ல, பல தசாப்தங்களாக அந்நாட்டை ஆட்டிப்படைக்கும் போதைப்பொருள் சாம்ராஜ்யமும்தான். அரசாங்கத்திற்கும் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே நடக்கும் இந்த நிழல் யுத்தத்தில் அப்பாவி மக்களே அதிகம் பலியாகின்றனர்.

நிழல் உலக சாம்ராஜ்யமும் குழந்தைகள் கடத்தலும்

மெக்சிகோவின் போதைப்பொருள் கும்பல்கள் வெறும் போதைப்பொருள் கடத்தலுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டவும், வருமானத்தைப் பெருக்கவும் மனிதக் கடத்தல், குறிப்பாக குழந்தைகள் கடத்தலில் ஈடுபடுவது உலகையே உலுக்கும் அதிர்ச்சியான உண்மை. வறுமையில் வாடும் குடும்பங்களைக் குறிவைத்து குழந்தைகளைக் கடத்துவது, அவர்களைக் கட்டாயமாகத் தங்கள் கும்பலில் சேர்த்துக்கொள்வது என இவர்களின் அட்டூழியம் எல்லை மீறிச் செல்கிறது. சமீபத்தில் கூட “லா டியாப்லா” (La Diabla) போன்ற கும்பல்கள் கைதானபோது, அவர்கள் கருவில் இருக்கும் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் நடத்திய கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்தக் கடத்தல் கும்பல்கள் மெக்சிகோவை ஒரு பாதுகாப்பற்ற தேசமாக மாற்றியிருக்கின்றன.

‘எல் மென்சோ’ (El Mencho) கொலை: போர்க்களமான மெக்சிகோ

இந்த நிழல் உலகத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவன் ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) அமைப்பின் தலைவன் ‘எல் மென்சோ’. அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அரசாங்கங்களால் தேடப்பட்டு வந்த இவன், நேற்று (பிப்ரவரி 22, 2026) ஜாலிஸ்கோ மாநிலத்தில் நடந்த ராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டான்.

இவன் கொல்லப்பட்ட செய்தி காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, அவனது ஆதரவாளர்கள் மெக்சிகோவின் பல நகரங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். பேருந்துகள் எரிக்கப்பட்டு, சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. மன்ஹாட்டன் போன்ற முக்கிய நகரங்களின் விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் வன்முறை கும்பல்களின் பிடியில் சிக்கியுள்ளன. ராணுவத்திற்கும் கடத்தல் கும்பலுக்கும் இடையே நடக்கும் இந்த நேரடி மோதலால் மெக்சிகோ தற்போது ஒரு உள்நாட்டுப் போர் நடக்கும் சூழலில் காட்சியளிக்கிறது.

அடுத்து என்ன?

தலைவன் கொல்லப்பட்டாலும், அடுத்த வாரிசு யார் என்பதில் அந்தக் கும்பலுக்குள்ளேயே மோதல்கள் வெடிக்க வாய்ப்புள்ளது. இது மெக்சிகோவின் வன்முறையை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அரசாங்கம் எவ்வளவுதான் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினாலும், இந்த போதை சாம்ராஜ்யத்தின் வேர்கள் மிக ஆழமாகப் படர்ந்துள்ளன.

ரமாபிரபா

Related Posts

error: Content is protected !!