“மரணத்தை ‘காண்டென்ட்’ ஆக்கும் ஊடகம், மனிதநேயத்தையே கொன்று வருகிறது!”

“மரணத்தை ‘காண்டென்ட்’ ஆக்கும் ஊடகம், மனிதநேயத்தையே கொன்று வருகிறது!”

முன்னெல்லாம் இந்த யூடியூப் சேனல்கள்தான் ஊரில் எங்காவது பிரபலங்கள் வீட்டில் மரணம் என்றால் வெறிகொண்டு போய் கேமராவும் மைக்குமாக நின்றுகொண்டு கேதம் கேட்க வருகிற ஒவ்வொருவரிடமும் இங்கிதமே இல்லாமல் எதையாச்சும் கன்டென்ட் குடுத்துட்டு போங்கனு மைக்கை நீட்டி பேசச்சொல்லி அதன் மூலம் வருமானம் பார்க்க முயற்சி செய்வார்கள். பின்மரக்கட்டைகள் அதில் முன்னோடியாக இருந்தவர்கள். சரி சிறிய முதலீட்டில் இயங்கும் சிறிய நிறுவனங்கள் வருமானத்துக்காக இப்படி செய்கிறார்கள்னு நினைச்சிருதேன். ஆனால் இப்போதெல்லாம் அதே வேலையை பெரிய கார்பரேட் நியூஸ் சேனல்களும் செய்வது வேதனையாக இருக்கு. அது சாட்சியா இருந்துது நேற்றைய தினம்.

ஒரு பிரபல நியூஸ் சேனல் நேற்று மட்டும் மனோஜ் இறந்து போனதை வைத்து இருபது வீடியோ, 120 ஷார்ட்ஸ், லைவ்னு போட்டிருக்கிறார்கள். அதிலும் அவருடைய கண்ணீரை பாருங்கள், இறந்து போன உடலை பாருங்கள்னு அநாகரீகமான தலைப்பு வேற…! ஒரு பெரியவர் தன் புள்ளையை பறிகொடுத்துட்டு நிக்குறார்… அங்கே போய்ட்டு கேமரா வச்சுட்டு கொஞ்சம் கூட அறமே இல்லாம எப்படி இவ்ளோ மோசமா நடந்துக்க முடியுது.

இறந்து போனவர் பெரிய தலைவர் பல லட்சம் பேருக்கு உதாரணம்னா அதை நேரலை பண்றதோ மக்கள் கருத்துகளை தொகுக்குறதோ நார்மல் நடைமுறை. அதுக்க ஒரு அவசியம் இருக்கு தேவை இருக்கு. ஒரு சிறிய நடிகர் இறந்து போனதுக்கு இதுதான் இந்தியாவோட முக்கிய பிரச்சனை போல 120 வீடியோ போடவேண்டிய அவசியம் என்ன? இந்த சாவு வீட்டு சம்பாத்தியம்லாம் எப்படி உடம்புல ஒட்டும்.

இந்த செய்தி நிறுவனம்தானு இல்ல எல்லாருமே அப்படித்தான் நேத்து நடந்துகிட்டாங்க. இந்த நிறுவனங்களோட தலைமைல இருக்கக்கூடிய மனிதர்கள் எல்லாருமே மிகுந்த அறவுணர்ச்சி கொண்டவங்களா அறியப்படறவங்க. ஆனால் அவங்க இருந்தும் இப்படி நடக்கறத பாக்க ரொம்ப வருத்தமா இருக்கு. சாவு சடங்குகளை சொந்த பந்தங்களோட சோக முகங்களை சோக வாத்தியங்கள் முழங்க அப்படி லைவ் பண்ணியும் வீடியோ பதிவா வெளியிட்டும் என்ன கிடைக்கப்போகுது. ப்ரைவஸினு ஒன்னு இருக்குல்ல, சாவு வீட்டுக்குனு ஒரு மௌனம் இருக்குல்ல. அப்படி வ்யூஸ் வாங்கி என்ன சாதிக்கபோறாங்க.

முன்னாடி ஒரு பின்மரக்கட்டைக்காரன்தான் சாவு வீட்ல இதெல்லாம் செஞ்சுட்டு இருந்தான். இன்னைக்கு ஒட்டு மொத்த மீடியாவும் அவனைப்போலவே மாறிட்டாங்கன்றது வருத்தமான உண்மை.

அதிஷா

error: Content is protected !!