மார்க் – பட விமர்சனம்!

மார்க் – பட விமர்சனம்!

குழந்தைக் கடத்தல், போதைப்பொருள் மாஃபியா எனச் சமூகத்தின் இருண்ட பக்கங்களைச் சமீபகாலமாகப் பல படங்கள் பேசி வருகின்றன. உச்ச நீதிமன்றமே எச்சரிக்கை விடுக்கும் அளவுக்குத் தீவிரமடைந்துள்ள குழந்தைக் கடத்தல் விவகாரத்தைப் பின்னணியாகக் கொண்டு, ஒரு ஆர்டினியான  கமர்ஷியல் ஆக்ஷன் பேக்கேஜாக வெளிவந்திருக்கிறது இந்த ‘மார்க்’.

கதைச் சுருக்கம்:

சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சுதீப். சீருடை இல்லையென்றாலும் கடமையிலிருந்து தவறாதவர். எதேச்சையாக 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருளைக் கைப்பற்றுகிறார். இது முதலமைச்சரின் மகன் மற்றும் தாதா நவீன் சந்திராவின் பகையை அவருக்குத் தேடித்தருகிறது. இதற்கு நடுவே 19 குழந்தைகள் கடத்தப்படும் விவகாரமும் குறுக்கிடுகிறது. இந்தச் சிக்கல்களை ஹீரோ எப்படித் தீர்த்தார் என்பதே மீதிக் கதை.

பாராட்டும் இடங்கள்:

மாஸ் சுதீப்: படம் முழுக்க சுதீப்பின் ஒற்றை மனித ராஜ்ஜியம் தான். ஆக்ஷன் காட்சிகளில் அவர் காட்டும் வேகம் ‘கிளாஸ்’. இறுதிக் காட்சியில் சிகரெட் பிடிப்பது குறித்துப் பேசும் வசனம் வரை ஸ்கோர் செய்கிறார்.

மிரட்டல் வில்லன்கள்: நவீன் சந்திரா கொடூரமான வில்லத்தனத்தில் அதிர வைக்கிறார். குரு சோமசுந்தரம் தனது ஸ்டீபன் ராஜ் பாத்திரத்தில் வில்லத்தனம் மற்றும் நகைச்சுவை என இரண்டிலும் முத்திரை பதிக்கிறார்.

தொழில்நுட்பம்: ஷேகர் சந்த்ராவின் ஒளிப்பதிவும், ஸ்டண்ட் சில்வாவின் ஸ்டைலிஷான சண்டைக் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.

சறுக்கல்கள்:

திரைக்கதை குழப்பம்: பல கிளைக்கதைகள் இருந்தாலும், அவை அனைத்தும் நேர்க்கோட்டில் இணையாதது பலவீனம்.

பலவீனமான திருப்பங்கள்: கதையின் பல திருப்பங்களை எளிதில் கணிக்கும்படி அமைத்தது சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது.

இசை: அஜனீஸ் லோகநாத் பின்னணி இசையில் வேகம் கொடுத்தாலும், ‘கூலி’ படத்தின் பாடலை நினைவுபடுத்துவதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆந்தை தீர்ப்பு:

முந்தைய படமான ‘மேக்ஸ்’ பாணியில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நடக்கும் கதையாக இதைச் செதுக்கியிருக்கிறார்கள். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருந்தால் ‘மார்க்’ அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்கும். இருப்பினும், ஆக்ஷன் பிரியர்களுக்கு இது ஒரு பக்லா மினி மீல்ஸ்!

ரேட்டிங்: 2.8/5

Related Posts

error: Content is protected !!