தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பில் தமிழர்கள் அதிகம்?

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய  பயங்கரவாத அமைப்பில்  தமிழர்கள் அதிகம்?

உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைதானவர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என தேசிய புலனாய்வு ஏஜென்சியின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் மிட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் குழுக்களின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்ற து இக்கூட்டத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

தேசிய புலனாய்வு ஏஜென்சி உயர் அதிகாரி மிட்டல் இக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சாராம்சம் இதோ:

பயங்கரவாத இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் தான் மிக அதிகமாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட்த்தில உள்ள மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் ராக்கெட் லாஞ்சர்களைக் கையாளுவதில் பயிற்சி பெற்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு கைதானவர்கள் எண்ணிக்கை 19.

மூன்றாவது இடத்தில் உள்ள கேரளத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15.

தெலுங்கானாவில் 14 பேரும், மகாராஷ்டிரத்தின் 12 பேரும், கர்நாடகத்தின் 8 பேரும், டெல்லியில் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாநிலங்களைத் தவிர உத்தரகாண்ட் மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எல்லோரிடமும் விசாரித்ததில் பொது தகவல் ஒன்று கிடைத்தது. இவர்கள் அனைவரும் தற்போது மலேசியாவில் உள்ள இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவுகளில் ஈர்க்கப்பட்டவர்கள் என மிட்டல் தெரிவித்தார். தேசிய புலனாய்வு ஏஜென்சியின் இயக்குனர் ஒய்.சி. மோடி பேசும் பொழுது பங்களாதேசை களமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் (ஜே எம் பி ) தன்னுடைய ஆதிக்கத்தை மெதுவாக கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் விரிவுபடுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.

ஜே.எம்.பி. அமைப்பு 2008 மேற்கு வங்காளத்தில் ஏங்கத் தொடங்கியது இதற்கு காரணமாக கூறப்படுகிற இரண்டு தலைவர்கள் பங்களாதேஷிலிருந்து அங்கு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில இருந்து தப்பிப்பதற்காக மேற்குவங்காளத்தில் புகுந்து தலைமறைவாக வாழ தொடங்கினார்கள் .

அவர்கள் மேற்கு வங்காளத்திற்கு வந்த மறு வருடமே 2006 ஆம் ஆண்டு ஜே.எம். பி. அமைப்பு துவக்கப்பட்டது,

பங்களாதேஷில் இருந்து மேற்கு வங்காளத்தில் புகுந்த 2 தலைவர்களும் மிகவும் ஓசையின்றி புதிதாக தங்கள் அமைப்புக்கு போராளிகளைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார்கள்.

கடந்த ஆண்டுகளில் அவர்களது அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை காண முடிகிறது. தற்பொழுது பங்களாதேஷிலிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து குடியேறியுள்ளவர்கள் மத்தியில் ஜே.எம்.பி. அமைப்பு தன்னுடைய ஆதிக்க எல்லைகளை விரிவுபடுத்த துவங்கி உள்ளது என மோடி தெரிவித்தார்.

error: Content is protected !!