காங்கிரஸ் தலைவரானார் கார்கே! யார் இவர்?- முழு விபரம்!

காங்கிரஸ் தலைவரானார் கார்கே! யார் இவர்?- முழு விபரம்!

ந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 24 ஆண்டுகளுக்கு பின் நேரு – காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகியுள்ளார். இதற்கு முன் நேரு – காந்தி குடும்பத்தைச் சேராத சீதாராம் கேசரி 1996-98 காலகட்டத்தில் இப்பதவியில் இருந்தார்.இந்த தேர்தலில் கார்கே 7897 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகளைப் பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17 ல் நடைபெற்றது. இதில் சோனியா காந்தியின் ஆதரவுடன் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து சசிதரூர் போட்டியிட்டார். தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 9900 பேர் ஓட்டளித்தனர். இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சோனியா காந்தி ஆதரவு பெற்ற வேட்பாளரான மல்லிகார்ஜூன் கார்கே 7,897 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசீதரூர் வெறும் 1,072 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 416 ஓட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது..

மல்லிகார்ஜுன கார்கேவின் அரசியல் வாழ்க்கைச் சுருக்கம்

மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகத்தின் கலபுரகியில் பிறந்தார். 1942ல் பிறந்த மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தற்போது வயது 80 ஆகும். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவரது அரசியல் வாழ்க்கை என்பது மிகவும் கடுமையாகவே இருந்தது. தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றாலும் கூட இவருக்கு பதவிகள் என்பது எட்டாக்கனியாகவே இருந்துள்ளது. அதாவது இவர் கடந்த 1972 முதல் 2008 வரை 1972, 1978, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008 வரை நடந்த சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 9 முறை வெற்றி பெற்றார். 1980இல் குண்டுராவ் அமைச்சரவையில் அமைச்சரானார். அதன்பிறகு 1990ல் எஸ் பங்காரப்பா அமைச்சரவையில் 1992 முதல் 1994 வரை எம் வீரப்ப மொய்லி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். 1996-99ல் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். 2005 முதல் 2008 வரை கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டார். அதன்பிறகு 2009ல் தான் தேசிய அரசியலில் அவர் நுழைந்தார்.

ஆம்.. 1972 முதல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஒன்பது முறை வெற்றி பெற்ற அவர் 2009 மற்றும் 2014இல் குல்பர்கா மக்களவைத் தொகுதியில் வென்று இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வானார். அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டபோது 2019இல் அவர் தோல்வியடைந்தார். பின்னர் 2021இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார்.

கர்நாடகாவில் வெவ்வேறு காங்கிரஸ் அரசுகளில் அமைச்சர் பொறுப்பு வகித்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் வென்றபின் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. 2014-2019 காலகட்டத்தில் காங்கிரஸ் மக்களவைக் குழுவின் தலைவராக இருந்தார்.

2021இல் மாநிலங்களவைக்குத் தேர்வான பின் அந்த அவையின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன், ஒருவர் இரண்டு பதவிகள் வகிக்கக் கூடாது என்ற கட்சி விதியின் அடிப்படையில் அவர் அப்பதவியில் இருந்து விலகினார்.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த ராகுல் காந்தி அப்பதவியில் இருந்து விலகினார்.

பின்னர் சோனியா காந்தி இடைக்கால தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். சுமார் மூன்று ஆண்டுகள் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக இருந்தபின் தலைவர் பதவிக்கு உள்கட்சித் தலைவர் தேர்தல் நடந்தது.

சசி தரூரை எதிர்த்து போட்டியிட்டு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோத் காங்கிரஸ் தலைவராக வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாக முதலில் கருதப்பட்டது.

எனினும், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டதால் நேரு – காந்தி குடும்பத்தின் அதிருப்திக்கு உள்ளானார் என்று செய்து வெளியானது. பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகினார்.

பின்னர் எதிர்பாரா விதமாக மல்லிகார்ஜுன கார்கே களத்தில் கடை நேரத்தில் நுழைந்தார்.

நேரு – காந்தி குடும்பத்தின் ஆதரவைப் பெற்றவர் இவர்தான் என்று செய்திகள் வெளியானாலும், தங்கள் நடுநிலைமை வகிப்பதாகவே சோனியா காந்தி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!