விண்வெளியில் காராமணி முளைச்சிடிச்சு: இஸ்ரோ ஹேப்பி!

விண்வெளியில் தாவரம் வளர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள இஸ்ரோ, செயற்கைக்கோள்களுடன் சேர்த்து காராமணி விதைகளையும் விண்ணுக்கு அனுப்பி, அது முளைத்துள்ளதை வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் தனக்கென தனி ஆய்வு மையத்தை நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தில் 2 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.ராக்கெட்டில் இருந்து இரண்டு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பிரிந்தன. அவை பூமியை சுற்றிவரும் நிலையில், இரண்டுக்குமான தொலைவு தற்போது இரண்டு கிலோ மீட்டராகக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த இரண்டு விண்கலன்களையும் ஒருங்கிணைக்கும் பணி ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
விண்வெளியில் தாவரம் வளர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள இஸ்ரோ, செயற்கைக்கோள்களுடன் சேர்த்து காராமணி விதைகளையும் விண்ணுக்கு அனுப்பியது. விண்ணுக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் நான்கு நாட்களில் முளைத்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள இஸ்ரோ, விரைவில் இலை வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.