இந்தியா-சீனா ராணுவப் படை பேச்சுவார்த்தை தோல்வி!
இந்திய – சீன எல்லைப் பகுதியில் லடாக்கில் உள்ள சீன ராணுவ முகாம் மோல்டோவில் ஞாயிறன்று லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை காலை 10.30 முதல் மாலை 7 மணிவரை நடந்தது பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் எதுவும் இல்லை.இந்திய அணிக்கு லே பகுதியில் உள்ள 14வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் பிஜி.கே. மேனன் தலைமை வகித்தார்.
இந்தியா – சீனா இடையேயான ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 13வது பேச்சுவார்த்தை நேற்று காலை தொடங்கியது. கிழக்கு லடாக்கின் எல்லை கட்டுபாட்டு கோட்டு அருகே சீனாவுக்குள் உள்ள மோல்டோ என்ற இடத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை இரவு 7 மணி வரை நீடித்தது.
அப்போது கிழக்கு லடாக் எல்லையில் உள்ள எஞ்சி இருக்கும் ராணுவ படைகளை திரும்பப் பெறுமாறு இந்தியா வலியுறுத்தியதாக தெரிகிறது. 2 நாடுகளுக்கும் இடையே தீர்வு ஏற்படும் வண்ணம் உறுதியான ஆலோசனைகளை வழங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை சீனா ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் தீர்வை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் எந்த ஆலோசனைகளையும் சீனா வழங்கவில்லை என்றும் இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
எந்த தீர்வும் எட்டப்படாத பொழுதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இந்த பேச்சுவார்த்தையின் நிலைத்தன்மையை உறுதி செய்வது என்றும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டு இருப்பதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் சீனாவை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.