கதகளி ஆடும் போதே காலமாகிப் போன மேஸ்ட்ரோ மடவூர் வாசுதேவன்!

கதகளி ஆடும் போதே காலமாகிப் போன மேஸ்ட்ரோ மடவூர் வாசுதேவன்!

கேரளாவில் கதகளி நடனத்தில் பிரபலமிக்கவர் மடவூர் வாசுதேவன் நாயர் (வயது 88).  தனது 13வது வயதில் கேரளாவில் புகழ் பெற்ற கதகளி நடனத்தினை பயில தொடங்கினார். முகம் முழுவதும் பல வர்ணங்கள் பூசி, ஒப்பனை செய்து கொண்டு மற்ற நடனங்களில் இருந்து வித்தியாசப்படும் வகையில் கதகளி நடனம் இருக்கும். ராவணன், துரியோதனன், கீசகன் மற்றும் கம்சன் ஆகிய புராண கால நாயகர்களின் வேடத்தினை ஏற்று மேடையில் ஆடி வாசுதேவன் அசத்துவார்.  தனது 13வது வயதில் கேரளாவில் கதகளி நடனத்தை பயில தொடங்கினார். முகம் முழுவதும் பல வர்ணங்கள் பூசி, ஒப்பனை செய்து கொண்டு மற்ற நடனங்களில் இருந்து வித்தியாசப்படும் வகையில் கதகளி நடனம் இருந்ததால் அதன் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக கதகளியை நேசிக்க ஆரம்பித்த அவர், ஒருக்கட்டத்தில் கதகளியை சுவாசிக்க ஆரம்பித்தார். அதனால் அனைத்து கதாபாத்திரங்களையும் மிக சுலபமாக தத்ரூபமாக செய்ய ஆரம்பித்தார். ராவணன், துரியோதனன், கீசகன் மற்றும் கம்சன் ஆகிய புராண காலநாயகர்களின் வேடத்தினை வாசுதேவன் ஏற்றால் அன்று மேடை அதிரும். கதகளிக்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தன் வாழ்நாளை சமர்ப்பித்த வாசுதேவனுக்கு 1997ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதும் மற்றும் கலாமண்டலம் உள்ளிட்ட பிற விருதுகள் வழங்கப்பட்டன

இந்த நிலையில் நேற்றிரவு ராமாயணத்தில் வில்லனாக வரும் ராவணன் வேடத்தினை ஏற்று அகஸ்தியகூடு மகாதேவ கோவிலில் அவர் நிகழ்ச்சி நடத்தி கொண்டு இருந்துள்ளார்.  10.40 மணியளவில் மேடையில் இருந்தபடியே அவர் மயங்கியுள்ளார்.  உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டார். அவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  அவரது மறைவுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!