ஜம்புலிங்கம் 3 டி – ஆடியோ ரிலீஸ் ஆல்பம்!

ஜம்புலிங்கம் 3 டி – ஆடியோ ரிலீஸ் ஆல்பம்!

‘ஜம்புலிங்கம் 3 டி’. படம் மே 13 ஆம் தேதி அனைத்து மக்களையும் மகிழ்விக்க வருகிறது.இதனிடையே நேற்று நடந்த ஆடியோ ரிலீச் நிகழ்சியில் பேசிய இயக்குநர், “காட்சிகளால் மனதை மயக்கி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திரைப்படமாக இந்த ஜம்புலிங்கம் 3 டி உருவாகியுள்ளது. தற்போதைய கால கட்டத்தில், மக்கள் யாவரும் புது புது படைப்புகளை எதிர்பார்க்கின்றனர். அவர்களின் அந்த எண்ணங்களை நிவர்த்தி செய்யும் விதமாக, அனைத்து சுவாரசங்களையும் இந்த படத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

அதுமட்டுமில்லாது வணிக ரீதீயாக இந்த படம் வெற்றி பெறுவதற்கான எல்லா அம்சங்களும் இதில் நிறைந்துள்ளது. எனவே எங்களின் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஜம்புலிங்கம் 3 டி கண்டிப்பாக வெற்றி படமாக அமையும். கலகலப்பான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அஞ்சனா, இந்த படத்தில் கோகுலுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். முற்றிலும் தனித்துவமான படமாக இந்த ஜம்புலிங்கம் 3 டி அமைய வேண்டும் என்பதற்காக 90 சதவீத படத்தை நாங்கள் ஜப்பான் நாட்டில் படமாக்கி இருக்கிறோம்” என கூறுகின்றனர் இரட்டை சகோதரர்கள் ஹரி – ஹரிஷ்.

குழந்தைகள் மட்டுமின்றி ஒட்டு மொத்த குடும்பங்களுக்கும் ‘ஜம்புலிங்கம் 3 டி’ ஒரு கோடை கால விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.