நிலவை ஆய்வு செய்யும் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

நிலவை ஆய்வு செய்யும் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் விண்கலன்கள் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ள ஜப்பான் நாடு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு இன்று அனுப்பியுள்ளது ஜப்பான் இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் ஐந்தாவது நாடாக இந்தப் பட்டியலில் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டின் சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 23-ந் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதி அருகே கால் பதித்த முதல் நாடு இந்தியா என்ற பெருமையை அடைந்தது. இதேபோல நிலவுக்கு ஜப்பான் ஸ்லிம் என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக கடந்த வாரம் ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் விண்ணில் ஏவவில்லை. மொத்தம் 3 முறை ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

நிலவின் பாறைகளை ஆராய்வதில் ஸ்லிம் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பேரண்டத்தின் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என ஜப்பான் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த பணியில் ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமைக்கு அமெரிக்காவின் நாசா உதவுகிறது

நிலவை நோக்கி விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஸ்லிம் லேண்டர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தரையிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பாயிண்ட் லேண்டிங் எனும் தொழில்நுட்பத்தில் இந்த லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு வெறும் சில மீட்டர் தொலைவில் இருந்து இதனை லேண்ட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் விண்வெளி ஆய்வில் இந்தத் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. “நிலவுக்கு SLIM லேண்டர் வெற்றிகரமாக ஏவப்பட்டது. உலகளாவிய விண்வெளி சமூகத்தின் மற்றொரு வெற்றிகரமான சந்திர முயற்சிக்கு வாழ்த்துக்கள்” என சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளது,,

error: Content is protected !!