இப்படை வெல்லும் – திரை விமர்சனம் =பக்கா எண்டெர்டெயின்மெண்ட்

இப்படை வெல்லும் – திரை விமர்சனம் =பக்கா எண்டெர்டெயின்மெண்ட்

‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ ஆகிய படங்களின் மூலம் தனிக் கவனம் பெற்ற இயக்குநர் கவுரவ் நாராயணன் ஸ்டண்ட் மாஸ்டர் போல் இரும்பு உடலை கொண்டிருந்தாலும் ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ போன்ற திரும்பிப் பார்க்க இயலாத படங்கள் கொடுத்த உதயநிதி ஸ்டாலினின் தக்கனூண்டு பலத்தை மட்டும் நம்பி உருவாக்கிய  ‘இப்படை வெல்லும்’- ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நல்ல இருக்குது. அதிலும் டைட்டில் போடும் போதே  கார்கில் போர் வெற்றியை கொண்டாடும் காட்சியில் ஆரம்பித்து, நம் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி, செஸ் விஸ்வநாதன் ஆனந்த், பேட்மின்ட்டன் பி.வி.சிந்துவின் வெற்றிகளைக் கடந்து, ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றவற்றை காட்டி அட சொல்ல வைத்து விடுகிறார். கூடவே படத்தின் நிஜ ஹீரோ என்று சொல்ல கூடிய அளவில் ரிச்சர்டின் ஒளிப்பதிவும் ஹீரோயினை அதுவும் அழகு மயில் மஞ்சிமா மோகனின் கதையோடு இணைந்து பயணிக்கும் பாணியும் நம்மை ஸ்மைலி  ஃபேஸ் மோடுக்கு கொண்டு போகத்தான் செய்கிறது.

ஒட்டு மொத்தமாக கதை என்னவென்று கேட்டால் டிகிரி முடித்த நடுத்த்கர ஃபேமிலி இளைஞனான  உதயநிதி . அவரின் அம்மா ராதிகா – தமிழகத்தின் முதல் பேருந்து ஓட்டுநர். இவரின்  கனவு வீட்டை கட்டி முடிக்க நன்றாக சம்பாதிக்க வேண்டும் கூடவே தான் லவ் செஞ்ச பெண்ணான மஞ்சிமா மோகனை திருமணம் செய்து செட்டிலாக வேண்டும் என்ற சாத்தியமான கனவுகளோடு இருக்கிறான். அதே சமயம் டப்பிங் ஆர்டிஸ்டான சூரி தன் மனைவியின் தலைப்பிரசவத்தின் பொழுது அவளருகில் இருக்க வேண்டுமென ஊருக்கு போய்க்கொண்டிருக்கிறான்

இந்த இருவர் பயணமும் ஒரு பயங்கரவாதி (டேனியல் பாலாஜி)யால் திசை மாறி என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்கபடும் நிலை ஏற்படுகிறது. ஆனாலும் ஒன்றரை கிலோ மூளைய பயன்படுத்தி இவ்விருவரும் தங்களைக் காப்பாற்றி , நிரபராதி என்றும் நிரூபிக்கிறார்கள் என்பதே ‘இப்படை வெல்லும்’கதை.

உதயநிதி இதுவரை ட்ராவல் செய்யாத ஆக்ஷன் காமெடி ரோல் கொடுத்து , சொல்ல நினைத்த கதையை கொஞ்சம் தெளிவாக அதிலும் வியாபார சமாச்சாரங்கள் மிக்ஸ் பண்ணி கொடுத்துள்ள கவுரவ் நாராயணன் இப்படத்திற்க்காக ரொம்ப மூளையை கசக்கி இருக்கிறார் என்றாலும் நம் போலீஸையும், தீவிரவாதிகளின் போக்கையும் செதுக்கியதில் சறுக்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்

சோட்டாவாக வரும் டேனியல் பாலாஜியும் அவரது நடிப்பும் ரொம்ப பொருத்தமாகி இருக்கிறது. அதே சமயம் டிரைவர் ராதிகா கேரக்டர் மற்றும் ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன் ரோல்களெல்லாம் வீணடிக்கப்பட்டு  இருப்பது கவலைக்குரிய அம்சம்தான். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளது. டி.இமான் இசை(யாம்).

மொத்தத்தில் எல்லா திரைப்படங்களில் இருப்பது போல் இப்படத்திலும் சில பல குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கவுண்டரில் காசு கொடுத்து தியேட்டருக்குள் வரும் ரசிகனுக்கு ஒரு பக்கா எண்டெர்டெயின்மெண்ட் படத்தை வழங்கியதில் லைகா காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

 

மார்க் 5 / 3. 25

error: Content is protected !!