ஐ.பி.எல்.போட்டி: அடுத்த 3 சீசன்களுக்கான தேதிகள் அறிவிப்பு!

ஐ.பி.எல்.போட்டி: அடுத்த 3 சீசன்களுக்கான தேதிகள் அறிவிப்பு!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 24–ந் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24, 25-ந் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஐ.பி.எல். போட்டியின் அடுத்த 3 சீசன்களுக்கான தேதிகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி வருகிற மார்ச் 14-ந்தேதி 18-வது சீசன் போட்டி தொடங்குகிறது. மே 25-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.2026-ம் ஆண்டு சீசன் மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரையிலும், 2027-ம் ஆண்டு சீசன் மார்ச் 14-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரையிலும் நடை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 சீசன்களைப் போலவே 2025-ம் ஆண்டு சீசனிலும் 74 போட்டிகள் இருக்கும். போட்டிக்கான தேதி குறித்து இன்று காலை அணி உரிமையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. போட்டிக்கான இடம், யார்-யார் எந்த தேதியில் மோதுவது உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்துக்கான இறுதி பட்டியலில் 574 பேர் இடம் பெற்றனர். இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர்

இந்த நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஏல பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரது அடிப்படை விலை குறித்து தெரிவிக்கப்படவில்லை.

error: Content is protected !!